தேர்தலுக்கு பிறகு அதிமுகவை கைப்பற்ற தினகரன் போட்ட மெகா பிளான்

0
73

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிமுகவை கைப்பற்றுவதற்காக பல அதிரடி திட்டங்களை இரகசியமாக போட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன் ஒரு பகுதியாகவே மத்திய அரசுடன் ரகசிய பேச்சுவார்த்தை ஏற்பட்ட உடன்படிக்கையின்படி தமிழகம் வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா அதிமுகவில் சசிகலாவை இணைப்பது பற்றி எடப்பாடி பழனிச்சாமி இடம் பேசியதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனாலும் இதற்கு செவிசாய்க்காத எடப்பாடி பழனிச்சாமி இதனை அறவே மறுத்து விட்டதன் காரணமாக, இந்த பேச்சுவார்த்தையில் சரியான உடன்படிக்கை ஏற்படவில்லை என்று சொல்லப்படுகிறது. ஆகவே உள்துறை அமைச்சர் அமித்ஷா கோபத்துடன் டெல்லி திரும்பி இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.

அதேவேளையில், டிடிவி தினகரன் எப்பொழுதும் ஸ்லீப்பர் செல்ஸ் அதிமுகவில் இருப்பதாக சொல்வதுண்டு. தற்போது அந்த ஸ்லீப்பர் செல்ஸ் தன்னுடைய வேலையை ஆரம்பித்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்களை வைத்து கட்சிக்குள் குழப்பத்தை உண்டாக்கி அதன் மூலமாக, அதிமுகவின் முக்கிய தலைவர்களை அந்த கட்சியை விட்டு விலகி வரச்செய்து அதிமுகவை பலமிழக்க வைப்பதே டிடிவி தினகரனின் திட்டம் என்று சொல்லப்படுகிறது.

அதோடு மட்டுமல்லாமல் எப்பொழுதும் அதிமுகவில் எங்களுடைய ஸ்லீப்பர் செல்ஸ் இருக்கிறார்கள் என்று தொடர்ச்சியாக தெரிவித்து வரும் டிடிவி தினகரனின் அந்தப் பேச்சுக்கு உயிர்ப்பிக்கும் விதமாக இப்பொழுது ஒரு சில வேலைகளை ரகசியமாக அந்த ஸ்லீப்பர் செல்கள் மூலமாக செய்யத் தொடங்கியிருக்கிறார் டிடிவி தினகரன் என்றும், தெரிவிக்கப்படுகிறது.

ஆனாலும் இதனை அறிந்து கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் மாநில உளவுத் துறையை வைத்து ஒரு சில ரகசிய மாற்றங்களை டிடிவி தினகரனுக்கே தெரியாமல் செய்திருப்பதாகவும் செய்திகள் கிடைத்திருக்கின்றன.

ஆனால் டிடிவி தினகரனின் அதிமுகவை கைப்பற்றும் இந்த முயற்சியானது இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டசபைத் தேர்தலுக்குப் பின்னர் முழுமை அடைந்து வெற்றி பெறலாம் என்று சொல்லப்படுகிறது. காரணம் அதிமுகவை பலவீனப்படுத்தும் அதன் மூலமாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மிக அதிக இடங்களில் வெற்றி பெறலாம் என்று சொல்லப்படுகிறது.

அம்மாவின் விசுவாசிகள் அதிமுகவில் தான் இருக்கிறார்கள் என்று முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் சொல்லிக் கொண்டிருந்தாலும் அதிமுகவில் சசிகலா இருந்தவரையில் அதிகாரத்தின் மையப்புள்ளியாக அவர்தான் இருந்தார் என்றும் சொல்லப்படுகிறது.

அப்படி இருக்கையில், அம்மாவின் உண்மையான விசுவாசிகள் அனைவரும் அதிமுகவில் இருந்தாலும்கூட அவர்கள் சசிகலாவிற்கு தான் இன்று வரையில் விசுவாசமாக இருப்பதாகவும் செய்திகள் கிடைத்திருக்கின்றன.

ஆகவே அவர்களை வைத்து அதிமுகவை பலவீனப்படுத்தி தோல்வியுறச் செய்து விட்டு அதன் மூலம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெற்றி பெற்று அதன்பிறகு அதிமுகவை கைப்பற்றுவதற்கான திட்டங்களை டிடிவி தினகரன் தீட்டி வருவதாக சொல்லப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் அந்த முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறுவதற்காக தான் மத்திய பாஜகவுடன் ரகசிய உறவை டிடிவி தினகரன் வைத்திருக்கின்றார். அது வெளியில் யாருக்கும் தெரியாது என்றும் சொல்லப்படுகிறது. இப்படி அதிமுகவும், டிடிவி தினகரனும் மாறி மாறி ஆடும் ஆடுபுலி ஆட்டத்தின் இறுதிக் கட்டம் நெருங்கிக் கொண்டு இருக்கிறது. இந்த ஆடுபுலி ஆட்டத்தில் வெற்றியாளர் யார் என்று எதிர்வரும் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க இருக்கும் தமிழக மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.