திருப்பரங்குன்றம் ஆடி திருவிழாக்கள்!

0
98

தமிழ் கடவுளாம் முருகப் பெருமான் குடிகொண்டு அருள் புரிந்துவரும் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஊரடங்கு காரணமாக, முருகப்பெருமானுக்கு உகந்த வைகாசி விசாக பெருவிழா மற்றும் ஆனி முப்பழ பூஜை விழா உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டது. இந்த சூழலில் சென்ற வருடத்தில் நடந்ததுபோல ஆடி கார்த்திகை, ஆடிபூரம் திருவிழாக்கள் கோவிலுக்குள் திருவிழாவாக நடைபெற வேண்டும் என்பது பக்தர்களின் வேண்டுகோளாக இருக்கிறது.

இப்படியான சூழ்நிலையில், இந்த விழாக்கள் கோவிலுக்கு உள்ளேயே உள் திருவிழாவாக நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்திருக்கிறது. அதன்படி வருகின்ற இரண்டாம் தேதி அதாவது திங்கள்கிழமை ஆடி கார்த்திகை திருவிழா கோவிலுக்குள் உள் திருவிழாவாக நடக்கும். அதாவது கோவிலுக்குள் இருக்கின்ற உற்சவர் சன்னதியில் சுப்பிரமணியசுவாமி, தெய்வானைக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம், தீபாராதனை நடைபெறும் அதன்பிறகு திருவாச்சி மண்டபத்தில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சி மாலை 6 மணி அளவில் நடக்கும் என்று சொல்லப்படுகிறது. அதேபோல வருகின்ற 10ஆம் தேதி ஆடிப்பூரம் விழாவும் உள் திருவிழாவாக நடைபெற இருக்கிறது.

ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு சேர்த்து தெய்வானை அம்பாளுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறும் இதனைத்தொடர்ந்து திருவாச்சி மண்டபத்தில் தெய்வானை அம்மாள் மட்டும் புறப்பாடு நிகழ்ச்சி நடக்கும். இந்த இரண்டு திருவிழாக்களிலும் சுவாமி புறப்பாடு நேரத்தில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.