செக் மோசடி வழக்கு அரசியல் பழிவாங்கல்?

0
105

நடிகர் சரத்குமார் மற்றும் நடிகை ராதிகாவுக்கு எதிராக இருந்த செக் மோசடி வழக்கில் அவர்கள் இருவருக்கும் ஒரு வருட சிறைதண்டனை வழங்கி நேற்றைய தினம் தீர்ப்பளித்தது நீதிமன்றம்.இது தொடர்பாக சரத்குமார் தெரிவித்ததாவது இந்த வழக்கு தள்ளுபடி ஆகும் என நினைத்தோம் இது குறித்து உயர்நீதிமன்றத்தில் முறையிட இருக்கிறோம். ஆகவே தண்டனையை நிறுத்திவைத்திருக்கிறார்கள் எங்கள் பக்க கருத்துக்களை தெரிவித்திருக்கிறோம் என தெரிவித்திருக்கிறார்.

குறிப்பிட்ட நாளுக்கு முன்னதாகவே காசோலையை வங்கியில் செலுத்தியிருக்கிறார்கள் என்று தெரிவித்த அவர் ஆனாலும் எங்களுடைய தரப்பில் பிணைத் தொகையாக சொத்துக்களுக்கு குறிப்பிட்ட தொகைக்கு மேல் ஆகவே இருக்கிறது என்று தெரிவித்தார்.

இதன்காரணமாக எங்களுடைய தரப்பிலான கருத்துகளை நாங்கள் எடுத்து தெரிவித்தோம் அதோடு தண்டனை குறித்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருக்கிறோம் இரண்டு நாட்களுக்கு முன்பு ராதிகா சரத்குமார் தொற்று தடுப்பு மருந்து எடுத்துக் கொண்டார். அவருக்கு லேசான தலைவலி காய்ச்சல் இருந்து வருகிறது இதனால் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இது முற்றிலுமாக தொழில் சம்பந்தப்பட்டதாகும் அரசியல் பழிவாங்களாக நாங்கள் கருதவில்லை என சரத்குமார் தெரிவித்துள்ளார்.