கல்லூரிக்குள் வந்தது தப்பா? பிரகாஷ்ராஜ் காலடி பட்ட இடத்தை கோமியத்தால் சுத்தம் செய்த மாணவர்கள்!!

0
36

கல்லூரிக்குள் வந்தது தப்பா? பிரகாஷ்ராஜ் காலடி பட்ட இடத்தை கோமியத்தால் சுத்தம் செய்த மாணவர்கள்

 

தனியார் கல்லுரி நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக நடிகர் பிரகாஷ் ராஜ் கலந்து கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

 

பிரகாஷ் ராஜ் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.மேலும் குணச்சித்திர வேடங்களுக்கு பொருத்தமான இவர் தமிழ் மொழி படங்களில் வில்லன்,ஹீரோ என்று தனது நடிப்பால் ரசிகர்களை தன் வசம் ஈர்த்தவர்.கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான ‘கில்லி’ படத்தில் விஜய்க்கு ஏற்ற வில்லனாக நடித்து அனைவரையும் கவர்ந்திருப்பார்.மேலும் இப்படத்திற்கு பிறகு அவரின் டைலாக் ஆன ‘ஹாய் செல்லம்’ என்று சொன்னாலே போதும் அவருடைய முகம் நினைவில் தோன்றும்.அந்தளவிற்கு முத்துப்பாண்டி கதாபாத்திரம் ஆழமாக தமிழ் ரசிகர்கள் மனதில் பதிந்து விட்டது.

 

மேலும் இவர் நடிப்பை தாண்டி சில படங்களை இயக்கியுள்ளார்.மேலும் சமூக பணிகள்,அரசியல் என வலம் வந்து கொண்டிருக்கிறார்.இந்நிலையில் இவர் தொடர்ந்து மத்தியில் ஆளும் பாஜக அரசையும்,பிரதமர் மோடி அவர்களையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட இவர் தோல்வியை சந்தித்தார்.

 

இவர் பல தனியார் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தனது பேச்சால் அனைவரையும் கவர்ந்து வருகிறார்.இந்நிலையில் கர்நாடக மாநிலம் சிவ மொக்காவில் அமைந்துள்ள எம்.வி. என்ற தனியார் கல்லூரி ஒன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார்.மேலும் அதில் சினிமா,மேடை நாடகம்,திரையரங்கு வசனம் மற்றும் சமூகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடை பெற்றுள்ளது.

இந்நிலையில் அக்கல்லுரியில் பயின்று வரும் மாணவர்களை தவிர்த்து இந்த நிகழ்ச்சி நடை பெறுகிறது என்றும் கல்லூரிக்கு சம்மந்தம் இல்லா ஒரு நிகழ்ச்சி நடை பெறுகிறது என்றும் தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் பிரகாஷ் ராஜ் தொடர்ந்து பாஜகவை கடுமையாயக விமர்சம் செய்து வருவதால் அக்கல்லூரியில் படிக்கும் பாஜகவை சேர்ந்த மாணவர்களும் அவர் கல்லுரிக்கு வருகை தந்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 

மேலும் பிரகாஷ் ராஜ் கல்லூரியை விட்டு வெளியேற வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பிய படி கல்லூரி வெளியே போராட்டம் நடத்தினர்.மாணவர்களின் போராட்டத்தை அறிந்து பிரகாஷ் ராஜ் பாதுகாப்பிற்க்காகவும் எந்த ஒரு அசம்பாவிதமும் நடை பெறாமல் இருப்பதற்க்காகவும் காவல் துறை அதிகாரிகள் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

 

இந்நிலையில் பிரகாஷ் ராஜ் நிகழ்ச்சி முடிந்து அவ்விடத்தை விட்டு சென்றுள்ளார்.இதனை தொடந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கில் பிரகாஷ் ராஜ் கால் பட்ட இடங்களில் கோமியத்தை கொண்டு சுத்தம் செய்வதை வீடியோவாக பதிவு செய்தனர்.பின்னர் இணையத்தில் பதிவிட்டு தங்களது எதிர்ப்பை காட்டினார்.இந்நிலையில் தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.

 

இந்நிலையில் பிரகாஷ் ராஜ் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட போராட்டத்தில் மாணவர்கள் அல்லாத சிலரும் கலந்து கொண்டுள்ளனர்.ஆனால் அவர்களை அடையாளம் காண முடியவில்லை என்று காவல் துறை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.