நிலா வரை சென்று விட்டு வந்த நிலையிலும் பெண்குழந்தைகளுக்கு முழு சுதந்திரம் கிடைத்ததா?? தற்போதைய காலக்கட்டம் அவர்களுக்கு உதவுகின்றதா??

0
94

நிலா வரை சென்று விட்டு வந்த நிலையிலும் பெண்குழந்தைகளுக்கு முழு சுதந்திரம் கிடைத்ததா?? தற்போதைய காலக்கட்டம் அவர்களுக்கு உதவுகின்றதா??

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடுவது அனைத்து மகளிருக்கும் பெருமிதமே. அந்த வகையில் பல வீடுகளில் அக்காலகட்டத்தில் இருந்தே பெண்கள் என்றால் வீட்டோடு மட்டும்தான் என்ற நிலை இருந்தது. தற்பொழுது அனைத்து துறைகளிலும் பெண்கள் உச்சகட்ட நிலை அடைந்திருப்பது பெருமிதமே. இருப்பினும், வயசுக்கு வந்த பெண்களை வீட்டில் வைத்திருப்பது வயிற்றில் நெருப்பை கட்டிக்கிட்டு வைத்திருப்பதற்கு சமம் என பல பெற்றோரும் கூறுவர். அதனாலேயே பெண் குழந்தைகள் படித்துக் கொண்டிருக்கும் வேளையிலேயே திருமணம் செய்து முடித்து விடுவர்.

ஆனால் அனைத்து துறைகளிலும் தற்பொழுது பெண்கள் ஓர் முக்கிய இடத்தை பெற்றுள்ளனர். பயந்து வீட்டில் பூட்டி வைத்திருந்த பெண்களை கூட, அவர்களது பெற்றோர்கள் தங்களது பிள்ளையை சாதனையாளராக மாற்றிப் பார்க்க வேண்டும் என்ற கண்ணோட்டம் வந்துவிட்டது. அந்த வகையில் ரசம், சாம்பார் என வைத்திருந்த கைகள் வானூர்தியை இயக்கும் கரங்களாக மாறிவிட்டது. பெண்கள் இருக்கும் நிலை மேலும் தொடர வேண்டும் என்பதே அனைவரின் ஆசை. ஆனால் பெண்கள் உயர் இடத்தில் அல்லது உயர் பதவிக்கோ சென்று விட்டாலே அவர்களை கீழே இறக்குவதற்கு என்று பெரிய கும்பல் உள்ளது.

இவர்களுக்கு இத்தனை சலுகைகள் உள்ளது, இவர்கள் இப்படிப்பட்டவர்கள் ,இதனால் தான் இப்படி உயர்ந்து விட்டனர் என்று வசை பாடுபவர்கள் இருந்து கொண்டே தான் உள்ளனர். பெண்கள் உயர் பதிவியில் இருப்பவர்களை கொண்டாடுவதை விட தவறான விழியில் அவர்கள் அந்த இடத்தை பிடித்திருப்பர் என பேசுபவர்கள் தான் உள்ளனர்.

மேலும் பல துறைகளில் அடுத்தடுத்து கட்டத்தை பெண்கள் கடந்து செல்வதற்கு பாலியல் வன்கொடுமை என்பதை பார்க்க வேண்டியதாக உள்ளது. இதெல்லாம்  அனைத்து பெண்களும் அனைத்து துறைகளிலும் சந்தித்து வருகின்றனர். சட்டங்கள் கடுமையாக்கப்படும் பொழுது தான் இந்த பிரச்சனைகளிலிருந்து பெண்களுக்கு  முழுமையான சுதந்திரம் கிடைக்கும். அதுவரையில் அதற்காக மட்டுமே குரல் கொடுக்க முடியும்.