நீங்கள் ராஜீவ் காந்தியின் மகன் தானா…? அசாம் முதலமைச்சர் ராகுல்காந்தி மீது கடும் விமர்சனம்!

0
58

சுமார் 70 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட உத்தரகாண்ட சட்டசபைக்கு வரும் 14-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் மாதம் 10ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்படவிருக்கின்றன.

இதில் பாஜக, காங்கிரஸ், கட்சி உள்ளிட்ட முக்கிய கட்சிகள் களமிறங்கவிருக்கின்றன. ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்கு பாஜகவும், ஆட்சியைப் பிடிப்பதற்கு காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக முயற்சி செய்து வருகிறது.

இந்த சூழ்நிலையில், பாஜக வேட்பாளர்களை ஆதரிக்கும் விதமாக அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா நேற்று உத்தரகாண்டில் பிரச்சாரம் செய்தார். அப்போது உரையாற்றிய அவர் ராகுல்காந்தி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார் என்று சொல்லப்படுகிறது.

அவர் பேசும்போது, பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய துள்ளிய தாக்குதலுக்கு ராகுல்காந்தி ஆதாரம் கேட்கிறார், நீங்கள் ராஜீவ் காந்தியின் மகன்தானா? அல்லது இல்லையா? என்பதற்கு நாங்கள் எப்போதாவது உங்களிடம் ஆதாரம் கேட்டிருக்கிறோமா? நம்முடைய ராணுவ வீரர்கள் தெரிவிக்கிறார்கள் என்றால் அவர்கள் தாக்குதல் நடத்தியிருப்பார்கள். ஆதாரம் கேட்டு கேள்வி எழுப்ப உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? என்று தெரிவித்தார்.