‘கேப்டன் விஜயகாந்த் பாதையில் ‘தளபதி’ விஜய்? – களம் கண்ட விஜய் மக்கள் இயக்கம்!

0
132
Captain Vijayakanth and Thalapathy Vijay

அரசியலில் கேப்டன் விஜயகாந்தின் பாணியை தளபதி விஜய் பின்பற்றுகிறார் என தற்போது மொத்த தமிழ்நாட்டு மக்களும் பேசுகின்றனர். அதற்க்கு காரணம் உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் பெற்ற வெற்றி.

நடிகர் விஜயகாந்த் கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தின் மூலம் தமிழக மக்கள் அனைவரின் மனதிலும் இடம் பிடித்தார்.அவரின் ரசிகர்கள் கூட்டம் அதிகம். நடிகர் சங்கத்தில் தலைவராகவும் இருந்தவர். அவரின் தலைமையில் தான் முதன் முதலில் நட்சத்திர கலை விழாக்களின் மூலம் நடிகர் சங்கத்திற்கு நிதி திரட்டப்பட்டது.

ரசிகர்களாலும் தொண்டர்களால் கேப்டன் என்று அன்போடும் உரிமையோடும் அழைக்கப்படுபவர் தான் நம் விஜயகாந்த்.

கேப்டன் வியாஜய்காந்தும், தளபதி விஜயும் செந்தூர்பாண்டி என்ற திரைப்படத்தில் இயக்குனர் SAC இயக்கத்தில் நடித்தனர்.

மேலும் அந்த திரைப்படம் தான் தளபதி விஜய் அவர்களுக்கு முதல் திரைப்படமாக அமைந்தது. அப்போது விஜய் அத்தனை அளவு பரிட்சயமான ஆளாக மக்களிடையே ஆகாததால் விஜய்காந்த்திற்காக மட்டுமே மக்கள் அந்த நாட்களில் செந்தூரபாண்டி திரைப்படத்தை பார்த்திருப்பார்.

இவ்வாறாக நடிகர் விஜய்க்கும் விஜயகாந்த்துக்கும் ஆரம்ப காலத்திலேயே நெருக்கமான தொடர்பு உண்டு.

இப்போது தளபதி விஜய் அரசியலிலும் கேப்டனின் பாதையை பின்பற்றி வருகிறாரா என மக்களிடையே சந்தேகம் எழுந்துள்ளது.

தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்ற கழகம்:

2000 ஆம் ஆண்டின் ஆரம்ப காலக்கட்டத்தில் விஜயகாந்த் அரசியலுக்கு வரப்போகிறார் என பல யூகங்கள் எழுந்தன, விஜயகாந்த் 2005 ஆம் ஆண்டு கட்சி ஆரம்பிப்பதற்கு முன் அவருடைய ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் சுயேட்சையாக உள்ளாட்சி தேர்தலில் நின்றனர். மிக அதிக இடங்களை பெற்று வெற்றியும் அடைந்தனர்.

அந்த வெற்றியை தொடர்ந்து புரட்சி கலைஞர் விஜயகாந்த் 2005 ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி தேமு தி க கட்சியை தொடங்கினார். அதன் பிறகு 2006 ஆம் சட்டமன்ற தேர்தலை தனித்து நின்று எதிர் கொண்டார்.

விருத்தாச்சலம் தொகுதியில் கேப்டன் மட்டுமே வெற்றி பெற்றார் என்றாலும் அந்த கட்சியின் வாக்கு சதவீதம் 8 ஐ தாண்டியிருந்தது. இது அர்ஷியல் பிரமுகர்களை விஜயகாந்தை உற்று நோக்க வைத்தது. அதன்பின் 2009 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் 10.3 சதவீத ஓட்டுக்களை பெற்றது.

2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக அதிமுக உடன் கூட்டணி வைத்தது, அந்த தேர்தலில் விஜய் மக்கள் இயக்கமும் அதிமுகவை ஆதரித்தது குறிப்பிடத்தக்கது. இந்த சட்டமன்ற தேர்தலில் தேமுதிக மிகப்பெரிய வெற்றியடைந்து திமுகவை பின்னுக்கு தள்ளியது. கேப்டன் விஜயகாந்த் முதன்முறையாக சட்டமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவரானார்.

விஜய் மக்கள் இயக்கம்:

தற்போது விஜயகாந்த் பாணியிலேயே விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் உள்ளாட்சி தேர்தலில் சுயேட்சையாக இறங்கினார். 169 இடங்களில் போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கித்தினர் 115 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.

ஒருபக்கம் தன்னுடைய பெயரையோ, கொடியையோ, புகைப்படங்களையோ தனது தந்தை மற்றும் தாய் யாரும் உபயோகிக்க கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் தளபதி.

அதன்பிறகு அவருடைய ரசிகர் இயக்கம் இந்த உள்ளாட்சி தேர்தலில் இத்தனை பெரிய வெற்றியை அடைந்துள்ளது. விஜயின் தெளிவான அரசியில் திட்டம் இதுவரை விளங்கவில்லை என்றாலும் ஏதோ ஒரு திட்டத்தின் அடிக்கல் தான் இந்த உள்ளாட்சி தேர்தல் என தோன்றுகிறது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

author avatar
Parthipan K