ஆண்டர்சனின் சாதனையை பற்றி சங்ககரா இப்படி கூறினாரா?

0
70

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் சேவைகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன அந்த வகையில் அனைத்து வித போட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடக்காத நிலையில் இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் யாரும் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.  ஏற்கனவே இங்கிலாந்து – வெஸ்ட் இண்டிஸ் அணி தொடர் முடிந்த நிலையில் தற்போது இங்கிலாந்து – பாகிஸ்தான் இடையான மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடர் நடந்து வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது போட்டி பெரும்பாலான நேரங்களில் மழை பெய்ததால் போட்டி டிராவில் முடிந்தது.

இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியில் வேகப்பந்து வீச்சாளரான ஆண்டர்சன் 600 விக்கெட் எடுத்து  புதிய சாதனையை படைத்தார். வேகப்பந்து வீச்சாளர்களில் இவர் மட்டுமே இந்த மைல் கல்லை எட்டினர். தனது  600 விக்கெட் பாகிஸ்தான் கேப்டன் அசார் அலி ஆவார்.  இதுகுறித்து இலங்கை அணியின் முன்னாள் கேப்டனும், எம்.சி.சி. தலைவருமான சங்ககரா தற்போது மட்டுமல்ல எதிர் காலத்திலும் வேகப்பந்து வீரர்கள் யாரும் ஆண்டர்சனின் 600 விக்கெட் சாதனையை முறியடிக்க முடியாது. அவர் ஒரு கடினமான இலக்கை நிர்ணயித்துள்ளார். அவரது இந்த சாதனையை யாராலும் நெருங்க முடியாது. இதனால் இந்த சாதனைக்கு சொந்தக்காரராக அவர் மட்டுமே இருப்பார் என்று கருதுகிறேன் இவ்வாறு கூறினார்.

author avatar
Parthipan K