ஏன் டைவ் அடிக்கவில்லை என இப்போதும் யோசிக்கிறேன் ! உலகக்கோப்பை ரன் அவுட் குறித்து வருத்தப்படும் தோனி !

0
78

ஏன் டைவ் அடிக்கவில்லை என இப்போதும் யோசிக்கிறேன் ! உலகக்கோப்பை ரன் அவுட் குறித்து வருத்தப்படும் தோனி !

இந்தியா உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேற முக்கியக் காரணமாக இருந்த தன்னுடைய ரன் அவுட் குறித்து தோனி இப்போது பேசியுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக தோனியின் ஆட்டம் மந்தமாக இருந்து வருகிறது. முக்கியமான போட்டிகளில் அவர் ரன்கள் சேர்க்க அதிகப் பந்தை எடுத்துக் கொள்வது விமர்சனங்களுக்கு உள்ளானது. இது குறித்து சச்சின் கூட தோனி மேல் விமர்சனம் வைத்தார்.

இந்நிலையில் உலகக்கோப்பையின் அரையிறுதிப் போட்டியிலும் இதுபோல மந்தமாக விளையாடிய தோனி அந்தப் போட்டியில் ரன் அவுட் ஆனார். வழக்கமாக தோனி விக்கெட்களுக்கு இடையே வேகமாக ஓடுபவர் என்பதால் அவர் ரன் அவுட் ஆவது மிகவும் அபூர்வமானது. ஆனால் அந்த ரன் அவுட்டின் போது அவர் டைவ் அடித்திருந்தால் தன் விக்கெட்டை இழந்திருக்க மாட்டார்.

அதுதான் தோனி இந்தியாவுக்காக கடைசியாக ஆடிய போட்டி. அதன் பின் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. எதிர்வரும் டி 20 உலகக்கோப்பையில் அவர் தேர்வாவதற்காக அறிகுறி எதுவும் தெரியவில்லை. இந்நிலையில் தோனி ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணல் ஒன்றில் ‘எனது முதல் போட்டியிலும் ரன் அவுட் ஆனேன்,, நியூசிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதி போட்டியிலும் ரன் அவுட் ஆனேன்.  அந்த போட்டியில் தாம் ஏன் டைவ் அடிக்கவில்லை என்று இப்போதும் யோசித்துக் கொண்டு இருக்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

நியுசிலாந்துக்கு எதிரான டி 20 தொடருக்கான டி 20 அணியிலும் தோனி சேர்க்கப்படவில்லை என்பது அவரது ரசிகர்களுக்கு மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Parthipan K