யாருமே என் பெயரை சொல்லி அழைப்பதில்லை; இப்படிதான் அழைக்கிறார்கள் ! தோனி பெருமை !

0
99

யாருமே என் பெயரை சொல்லி அழைப்பதில்லை; இப்படிதான் அழைக்கிறார்கள் ! தோனி பெருமை !

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி தமிழக ரசிகர்கள் தன்னை தல என்று அழைப்பது பற்றி பெருமையாகப் பேசியுள்ளார்.

உலகக்கோப்பை போட்டிகளுக்குப் பின் தோனி 6 மாதமாக இந்திய அணிக்காக எந்த வொரு போட்டியிலும் விளையாடவில்லை. இதையெல்லாம் கணக்கில் தோனியின் சர்வதேசக் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டதாக அனைவரும் கருத ஆரம்பித்துள்ளனர். பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் இது குறித்து மறைமுகமாக கருத்து தெரிவித்திருந்தார். அதனால் தோனியின் ரசிகர்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை ஐபிஎல் போட்டிகள்தான்.

ஐபிஎல் போட்டிகள் அறிமுகம் ஆனதில் இருந்து சிஎஸ்கே அணிக்காக விளையாடி வரும் தோனி சென்னை தனது இரண்டாவது தாய்வீடு என சொல்லி இருக்கிறார். தற்போது 38 வயதாகும் தோனி இந்த ஆண்டு ஐபிஎல் –ல் சென்னை அணிக்கு தலைமை தாங்க உள்ளார். ஆனால் அடுத்த ஆண்டு வீரர்களை முழுவதுமாக விடுவிக்கும் ஏலம் நடக்க இருப்பதால், தோனியை சி எஸ் கே அணி நிர்வாகம் தக்கவைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இம்மாதம் இறுதியில் தொடங்கவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்காக சென்னையில் முகாமிட்டு பயிற்சி செய்து வரும் சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில் ‘தமிழக ரசிகர்கள் யாருமே என்னை பெயரை சொல்லி அழைப்பதில்லை. எல்லோருக்கும் நான் தல தான். அந்த பெயரால்தான் நான் இவ்வளவு ரசிகர்களை பெற்றேன். தல என அவர்கள் அழைக்கும் போது நான் சகோதரன் என்ற உணர்வையே பெறுகிறேன். ஒவ்வொரு முறை அவர்கள் தல என்று அழைக்கும் போது என் மீதான அன்பையும் மரியாதையையும் வெளிப்படுத்துவதாக உணர்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.

மேலும் சென்னை அணி குறித்து ‘2008 ஆம் ஆண்டு ஐபிஎல் பயணம் தொடங்கியது. மைதானத்திலும்,  வெளியேயும் ஒரு மனிதாகவும், கிரிக்கெட் வீரனாகவும் கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் கலையை ஐபிஎல்தான் எனக்குக் கற்றுக்கொடுத்தது’ என அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
Parthipan K