மும்பையை விழுத்திய சென்னை அணி நெகிழ்ச்சியில் கேப்டன் தோனி கூறிய வார்த்தை

0
74

14வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நேற்றைய தினம் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கியதே இதில் நடைபெற்ற முதல் போட்டியில் நேற்றைய தினம் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி உள்ளிட்ட அணிகள் சந்தித்தனர். நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் சென்னை அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் அடிப்படையில் களமிறங்கிய டுப்லஸ்ஸிஸ் மொயின் அலி உள்ளிட்டோருடன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார்கள். அதன்பிறகு அம்பத்தி ராயுடு காயம் காரணமாக, ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார்.

இதனால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்திற்கு ஆளானார்கள், மிகுந்த நம்பிக்கை வைத்திருந்த கேப்டன் தோனி 3 ரன்னிலும் சுரேஷ் ரெய்னா 4 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு சோர்வை கொடுத்தார்கள். முக்கிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இருந்தாலும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ருத்ராஜ் மிக அபாரமாக விளையாடினார். அவருக்கு துணையாக ரவீந்திர ஜடேஜா களத்தில் நின்ற நிலையில், 33 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து சமயத்தில் அவருடைய ஆட்டத்தை இழந்தார்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய அதிரடியாக விளையாடக்கூடிய பிராவோ 8 பந்துகளில் 3 சிக்ஸர் அடித்து 23 ரன்கள் சேர்த்து எதிரணியை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். கடைசியில் சென்னை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் சேர்த்தது நாற்பத்தி ஒரு பந்தில் அரைசதம் கண்ட ருத்ராஜ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அதோடு அவர் 58 பந்துகளை ஒட்டுமொத்தமாக சந்தித்து 88 ரன்களை சேர்த்து அசத்தி இருக்கிறார்.

157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற முனைப்புடன் களமிறங்கிய மும்பை அணியில் டிகாக் 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அன்மொல்பிரீட் 16 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். அதேபோல சூர்யகுமார் யாதவ் 3க்கும் இஷன் கிஷன் 11 ரன்களுக்கும் ஆட்டமிழந்தார். ஆனால் திவாரி மட்டும் தன்னுடைய அரை சதத்தை பூர்த்தி செய்தார். கடைசியில் மும்பை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. இந்த நிலையில், 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றியை கைப்பற்றியது.

இந்த வெற்றிக்கு பிறகு சென்னை அணியின் கேப்டன் தோனி அளித்த பேட்டியில் 30 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து மிக சிக்கலான கட்டத்தில் இருந்தோம். அந்த சமயத்தில் நாங்கள் கவுரவமான ஒரு ஸ்கோரை எதிர்பார்த்தோம். ருத்ராஜும் ப்ராவோவும் நாங்கள் எதிர்பார்த்ததை விட 160 ரன்களுக்கு அருகில் சென்று ஆட்டத்தை நிறுத்தினார்கள். ஆடுகளம் மெதுவாக இருந்ததன் காரணமாக, பேட்டிங் செய்ய கடினமாக இருந்தது ஆரம்பம் முதல் இறுதி வரை யில் பேட்ஸ்மேன் ருத்ராஜ் பேட்டிங் செய்தது விவேகம் என்று தெரிவித்திருக்கிறார் கேப்டன் தோனி.