கே எல் ராகுல் தலைமையில் விளையாடுவது மகிழ்ச்சி… தவான் பெருந்தன்மை!

0
86

கே எல் ராகுல் தலைமையில் விளையாடுவது மகிழ்ச்சி… தவான் பெருந்தன்மை!

கே எல் ராகுல் தலைமையில் ஜிம்பாப்வே தொடரில் விளையாடுவது குறித்து ஷிகார் தவான் பேசியுள்ளார்.

ஆகஸ்ட் 18 முதல் 22 வரை மூன்று ஒருநாள் போட்டிகளுக்காக ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியின் 16வது உறுப்பினராக கே.எல்.ராகுல் சேர்க்கப்பட்டுள்ளார். ராகுல் அணிக்கு கேப்டனாகவும் இருப்பார், முன்பு தலைமை தாங்க இருந்த ஷிகர் தவான் இப்போது துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக இந்த தொடருக்கு ஷிகார் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருந்தார். காயம் காரணமாக அவதிப்பட்ட கே எல் ராகுல் நேரடியாக அசியக்கோப்பை தொடரில்தான் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது ஜிம்பாப்வே தொடரில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.

பிசிசிஐ மருத்துவக்குழு, அவருக்கு கோவிட்-19க்கு பிந்தைய இரண்டு வார கால அவகாசத்தை பரிந்துரைத்துள்ளது. ஜூலை நடுப்பகுதியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு ஐந்து போட்டிகள் கொண்ட டி20-ஐ தொடருக்காக புறப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு ராகுலுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. ஆகஸ்ட் 27 முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும் ஆசிய கோப்பைக்கான இந்தியாவின் அணியில் ராகுல் இடம்பிடித்துள்ளார்.

இந்நிலையில் இந்த தொடர் குறித்து பேசியுள்ள தவான் “ காயத்தில் இருந்து ராகுல் மீண்டு அணிக்கு திரும்பியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. அவர் தலைமையில் விளையாடுவது மகிழ்ச்சி. இந்த தொடர் அவருக்கு முக்கியமானதாக இருக்கும். இந்த தொடரில் கற்கும் விஷயங்களைக் கொண்டு ஆசியக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடுவார் என்று நம்புகிறேன். ஜிம்பாப்வே அணியைக் குறைத்து மதிப்பிட மாட்டோம்” எனக் கூறியுள்ளார்.