இந்த தேதியில் மதியத்திற்கு பிறகு பக்தர்கள் மலையேற தடை! சபரிமலையில் கொண்டுவரப்பட்ட புதிய கட்டுப்பாடு!

0
137
Devotees are prohibited from climbing the mountain after noon on this day! New control brought in Sabarimala!
Devotees are prohibited from climbing the mountain after noon on this day! New control brought in Sabarimala!

இந்த தேதியில் மதியத்திற்கு பிறகு பக்தர்கள் மலையேற தடை! சபரிமலையில் கொண்டுவரப்பட்ட புதிய கட்டுப்பாடு!

ஆண்டு தோறும் மண்டல மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்படும்.அப்போது பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் மாலை அணிந்து வருவது வழக்கம்.அந்த வகையில் கடந்த மாதம் 16 ஆம் தேதி மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டது.தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.ஆனால் இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக கோவில் திறக்கப்படாத நிலையில் இந்த ஆண்டு அதிகளவு பக்தர்கள் வருகை தந்தனர் அதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

அந்த கூட்டத்தை தடுக்கும் வகையில் பக்தர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.மேலும் நாளொன்றுக்கு 90 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்வதற்கு முன்பதிவு செய்ய முடியும் என கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது.அதனை தொடர்ந்து 50 வயதிற்கு மேற்பட்ட பெண்கள்,சிறுவர்கள்,முதியவர்களுக்கு தனிவரிசை ஏற்படுத்தப்பட்டது.அதனால் முன்பதிவு நடைமுறையும் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் மண்டல பூஜை வருகிற 27 ஆம் தேதி செவ்வாய்கிழமை நடைபெறுகின்றது.அதனால் டிசம்பர் 26 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு தங்க அங்கி அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற இருக்கின்றது.பத்தனம்திட்டை ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் பாதுக்காப்பாக வைக்கப்பட்டுள்ளது.நாளை தங்க அங்கி ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புறப்படுகிறது.மேலும் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் தங்க அங்கி கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

27 ஆம் தேதி மதியம் 12.30 மணிக்கு மேல் மண்டல பூஜை தந்திரி தலைமையில் நடைபெறும்.மேலும் அன்று இரவு வழக்கமான பூஜை வழிபாடுகளும் நடைபெறும் அதன் பிறகு இரவு 11.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.அதனையடுத்து மகர விளக்கு பூஜைக்காக 30 ஆம் தேதி மாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படும்.ஜனவரி 14 ஆம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெறவுள்ளது.

அதனையொட்டி மாலை 6.30 மணிக்கு ஐயப்பனிற்கு திருவாபரணம் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெறும்.அதனை தொடர்ந்து பொன்னம்பல மேட்டில் ஐயப்பன் பக்தர்களுக்கு ஜோதி வடிவில் காட்சி தருவார்.இந்த மண்டல பூஜைக்காக சபரிமலையில் முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தங்க அங்கி மலைக்கு எடுத்து வருவதினால் 26 ஆம் தேதி மதியத்திற்கு பிறகு பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்பட மாட்டார்கள்.மேலும் அன்றைய தினம் 70 ஆயிரம் பேருக்கு மட்டுமே தரிசன முன்பதிவு அனுமதிக்கப்பட்டுள்ளது.மண்டல பூஜை நடைபெறும் டிசம்பர் 27 ஆம் தேதி சாமி தரிசனத்திற்கு 40 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K