கலைகட்டியது தேவர் ஜெயந்தி கொண்டாட்டம்! முதல்வர் துணை முதல்வர் பங்கேற்பு!

0
59

அனுமதி வழங்கப்படாத போதும் கூட பொதுமக்கள் பெண்கள் ஒருவருடன் பால்குடம் எடுத்து தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தி வருகிறார்கள்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின்113வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை மாவட்டம் கோரிப்பாளையத்தில் இருக்கின்ற முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்களும், மற்றும் அமைச்சர் பெருமக்களும், மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இருக்கிறார்கள்.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் இருக்கின்ற முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் அவருடைய பிறந்த நாளான இன்றைய தினம் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை கொண்டாடப்பட்டு வருகின்றது.

பெண்கள் மற்றும் பொதுமக்கள் போன்றோர் பால்குடம் எடுத்து மதுரை மாவட்டம் கோரிப்பாளையத்தில் இருக்கின்ற முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் சிலைக்கு மரியாதையை செலுத்துகிறார்கள்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இருக்கிறார்கள் இதை அடுத்து அமைச்சர்கள் செல்லூர் ராஜூ காமராஜ் ஆகியோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இருக்கிறார்கள்.

அதன்பின்பு பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருவுருவ புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகிறார்கள்.

இவ்விழாவை முன்னிட்டு வருடம்தோறும் நகரின் பல பகுதிகளில் இருந்தும் கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு அநேக பெண்கள் முளைப்பாரி பால்குடம் ஆகியவற்றை எடுத்து வருவது வழக்கமான ஒன்று.

இந்த வருடம் ஒரு முறை தோற்று கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால் அது போன்ற நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கப்படாமல் இருக்கிறது, ஆனாலும் பொதுமக்கள் வந்து மரியாதை செலுத்துகின்றனர்.

பெண்கள் பால்குடம் எடுத்து வந்திருக்கிறார்கள் ஐ.ஜி முருகன் தலைமையில் மதுரை மாவட்டத்தில் 5 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.