சுகன்யா சம்ரித்தி யோஜனா விதிகளில் மாற்றம்…இனி முதலீட்டாளர்களுக்கு எந்த மாதிரியான பலன்கள் கிடைக்கும்?

0
228

சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தில் தற்போது இரண்டு பெண்களுக்கு பிறகு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்தால் அவர்களின் கணக்கிற்கும் வரிவிலக்கு அளிக்கப்படுகிறது.

பெண் குழந்தைகளை பெற்ற பெற்றோர்கள் பலரும் அவர்களின் எதிர்காலத்தை நினைத்து கவலைகொள்ள ஆரம்பிப்பார்கள், பெண் குழந்தைகள் பிறந்த அன்றிலிருந்தே அவர்களுக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்கிற எதிர்கால திட்டங்களை வகுத்து விடுகின்றனர். நம் வீட்டில் எப்போது பெண் குழந்தை பிறந்தாலும். பிறந்ததிலிருந்தே, பெற்றோர்கள் குழந்தையின் எதிர்காலத்தைத் திட்டமிடத் தொடங்குகிறார்கள். பெண்களின் எதிர்காலத்தை பற்றி கவலைகொள்ளாமல் இருக்கத்தான் அரசு சுகன்யா சம்ரித்தி யோஜனா என்கிற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.Features and Tax Benefits of Sukanya Samriddhi yojana - ABC of Money

சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டம் ஒரு நீண்டகால திட்டமாகும், இந்தத் திட்டத்தில் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகள் அவர்களது பெற்றோரின் பெயரில் கணக்கை திறந்துகொள்ளலாம். இந்தத் திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு ரூ.250 முதல் முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் ஒரு குடும்பத்தில் இருந்து எத்தனை பெண்குழந்தைகளுக்கு வேண்டுமானாலும் கணக்கு தொடங்கலாம் மற்றும் இரண்டு குழந்தைகளின் கணக்கிற்கு மட்டுமே 80சி கீழ் வரி விலக்கு அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இரண்டு பெண்களுக்கு பிறகு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்தால் அவர்களின் கணக்கிற்கும் வரிவிலக்கு அளிக்கப்படுகிறது.Sukanya Samriddhi Yojana - A Complete Guide | Bank of Baroda

கணக்கு திறக்கப்பட்ட பெண் குழந்தை இறந்தாலோ அல்லது அப்பெண் வசிக்கும் முகவரி மாற்றப்பட்டாலோ இந்தக் கணக்கை மூடலாம். தபால் அலுவலகம் அல்லது வங்கிக்குச் சென்று இந்த கணக்கைத் தொடங்கலாம், இதன் மொத்த காலம் 21 ஆண்டுகள் ஆகும். பெண்ணின் 18 வயதுக்கு பிறகு இந்த கணக்கிலிருந்து படிப்பிற்காக பணம் எடுக்கலாம். சுகன்யா சம்ரித்தி யோஜனா கணக்கில் ரொக்கம், காசோலை, டிமாண்ட் டிராஃப்ட் போன்ற ஏதேனும் ஒரு முறைகளில் பணத்தை டெபாசிட் செய்யலாம். தற்போது இந்த திட்டத்தில் முதலீட்டுக்கு 7.6% வட்டி வழங்கப்படுகிறது.

author avatar
Savitha