மீண்டும் முதல்வர் ஆகிறார் யோகி ஆதித்யநாத்! உத்தரபிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது பாஜக!

0
61

உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா, உள்ளிட்ட 5 மாநிலங்களில் சமீபத்தில் சட்டசபை பொதுத் தேர்தல் நடைபெற்றது.இதில் நாட்டின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஆட்சியை தக்க வைப்பது யார் என்ற எதிர்பார்ப்பு தேர்தல் பிரச்சாரம் தொடங்கியதிலிருந்தே அதிகரித்துவிட்டது.

அதோடு உத்தரபிரதேசத்தில் ஆளும் கட்சியாக இருந்த பாஜக ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது.

இந்த நிலையில் இந்த 5 மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. ஆனாலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடைபெறுகிறது என்று சமாஜ்வாதி கட்சி தலைவர் தெரிவித்த குற்றச்சாட்டு வாரணாசியில் பரபரப்பை உண்டாக்கியது.

இதனை அடுத்து தலைமைத் தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த அவர் தெரிவித்ததாவது வாக்கு இயந்திரத்தில் முறைகேடு நடக்க வாய்ப்பில்லை என்று விளக்கம் கூறினார். வாரணாசியில் வெளியில் எடுத்துச் செல்லப்பட்டவை பயிற்சிக்காக கொண்டு செல்லப்பட்ட இயந்திரங்கள் ஆகும் என்று தெரிவித்து நடைபெற்ற சம்பவம் தொடர்பாக தெளிவான விளக்கத்தை கொடுத்தார்.

5 மாநிலங்களிலும் தேர்தல் விதி மீறல் சம்பவங்களுடன் தொடர்புடைய 2270 முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது 5 மாநில தேர்தலில் போட்டியிடும் மொத்தமுள்ள 6 , 900 வேட்பாளர்களில் 1600 பேர் குற்றப் பின்னணி கொண்டவர்கள் என்று கண்டறியப்பட்டிருக்கிறது என்ற அதிர்ச்சி தகவலையும் தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்திருக்கிறார்.

உத்தரப் பிரதேசத்தைப் பொறுத்தவரையில் பெரும்பாலான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் அந்த மாநிலத்தில் மறுபடியும் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்தார்கள். இந்த சூழ்நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் தொடக்கம் முதலே பாஜக முன்னிலை வகித்து வந்தது போட்டி கட்சிகளில் சமாஜ்வாதி கட்சி 2வது இடத்தில் இருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது.

உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கோரக்பூர் தொகுதியிலும், சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த அகிலேஷ் யாதவ் கர்ஹால் தொகுதியிலும், முன்னிலையில் இருக்கிறார்கள். தபால் வாக்கு எண்ணிக்கையில் நிஷாத் கட்சி வேட்பாளர் விவேகானந்தா பாண்டே கட்டா தொகுதியிலும், சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளர் ரான் விஜய்சிங் ஹட்டா தொகுதியிலும், முன்னிலை வகித்தார்கள்.

உத்தரப் பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவதற்கான அமைப்பில் இருக்கிறது அந்த கட்சி 250 க்கும் கூடுதலான தொகுதிகளில் முன்னிலையிலிருந்து வருவதாக தெரிகிறது. சமாஜவாதி 2வது இடத்தில் இருக்கிறது. எண்ணிக்கையின் அடிப்படையில் 115 இடங்களில் பின் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. மற்றவை 3 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது.

இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 4 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி 6 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. ஆம் ஆத்மி கட்சி ஒரே ஒரு இடத்தில் கூட முன்னிலை பெறவில்லை என்று சொல்லப்படுகிறது.

கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற உத்தரபிரதேச சட்டசபை பொதுத் தேர்தலில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் 312 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சி அமைத்தது. உத்தரப் பிரதேச முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பதவியற்றார். இந்த தேர்தலின் போது அந்தக் கட்சியின் மூத்த தலைவர்கள் 300 தொகுதிகளுக்கும் கூடுதலாக கைப்பற்றி மறுபடியும் நாங்கள் ஆட்சியை கைப்பற்றுவோம் என்று பிரச்சாரத்தில் தெரிவித்து வந்தார்கள்.

ஆட்சி அமைப்பதற்கான இடங்களை விடவும் கூடுதலான இடங்களில் அந்த கட்சி முன்னிலையில் இருக்கிறது 250 தொகுதிகளுக்கும் கூடுதலான தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. சற்றே சறுக்கலை சந்தித்த போதும் கூட பாஜக மறுபடியும் ஆட்சி அமைக்கும் சூழல் நிலவிவருகிறது உத்தரபிரதேச தேர்தல் களத்தில்.