தமிழில் இப்படி ஒரு படம் நடிக்க ஆசை! ரசிகர்களின் கேள்விக்கு ட்வீட் போட்ட மலையாள முன்னணி நடிகர் !

0
88

 

முன்னணி நடிகராக இருந்து தற்போது இயக்குனராக மாறி இருக்கும் பிரித்திவிராஜ் அவர்கள் தனக்கு ரொமான்டிக் தமிழ் படத்தில் நடிக்க விருப்பம் உள்ளதாக தெரிவித்துள்ளார். இச்செய்தி தமிழ் ரசிகர்களின் மனதில் ஆர்வத்தை தூண்டுகிறது.

2005 ஆம் ஆண்டு கே வி ஆனந்த் எடுத்த கனாக்கண்டேன் படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் பிரித்திவிராஜ் அவர்கள்.

பிரித்திவிராஜ் நடித்த பல படங்கள் தமிழில் டப்பிங் மற்றும் ரீமேக் செய்யப்பட்டு இருக்கின்றன. இவர் பாரிஜாதம் ,சத்தம் போடாதே, கண்ணாமூச்சி ஏனடா ,அபியும் நானும், காவியத்தலைவன், நினைத்தாலே இனிக்கும் போன்ற பல படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார் .

குறிப்பாக 2007 ஆம் ஆண்டு வெளியான மொழி என்ற படம் இவருக்கு பெரும் பெயரை பெயரையும் தமிழில் பெரும் வரவேற்பையும் நல்ல விமர்சனத்தையும் பெற்று தந்தது. படத்தில் நடித்த அனைவருக்கும் பிரபலம் பெற்ற பிரபலம் பெற்றனர். பாடல்களும் சூப்பர் ஹிட் ஆயின. பிரித்திவிராஜ் இதில் நல்ல ஒரு கதாபாத்திரத்தை வகித்து வந்தார் .

சமீபகாலமாக பிரித்திவிராஜ் மலையாள படங்களில் நடிக்கவும் படங்களை இயக்கவும் ஆர்வம் காட்டி வருகிறார். இவர் தமிழில் நடித்து ஆறு வருடங்களுக்கு மேல் ஆகிறது மேலும் இவர் நடித்த ஐயனும் கோஷம் என்ற படம் பெரும் வெற்றியை பெற்றது. அப்படம் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அப்படம் தமிழ் தெலுங்கு கன்னடம் போன்ற மொழிகளி மொழிகளில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் சமீபத்தில் ரசிகர்களின் ட்வீட்டுக்கு பதிலளித்த பிரித்திவிராஜ் அவர்கள் தன்னிடம் ஒரு ரசிகர் தமிழில் ரொமான்டிக் காமெடி படம் நடிக்க விரும்புகிறீர்களா? என்று கேட்டபோது  ‘அவர் தமிழில் மீண்டும் அப்படி ஒரு படத்தில் நடிக்க நான் நிச்சயம் விரும்புவேன்’ என்று பதிலளித்துள்ளார். தற்போது பிரித்திவிராஜ் எம்பிரான் என்ற படத்தில் பிஸியாக உள்ளார். இந்தப் படம் அவர் எடுத்த லூசிஃபர் என்ற படத்தின் இரண்டாம் பாகம் ஆகும். மோகன்லால் நடித்த லூசிபர் படம் சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர் ஆடுஜீவிதம், காளியன் போன்ற பல படங்களை தன் கைவசம் வைத்துள்ளார். ஆடு ஜீவிதம் சூட்டிங்கிற்காக பிரித்திவிராஜ் மற்றும் குழுவினர் ஜடா நாட்டிற்கு சென்றிருந்த போது பேரிடர் காரணமாக இந்தியா திரும்ப முடியாமல் அங்கேயே சிக்கி சமீப காலத்தில்தான் அவர் கேரளாவை வந்து சேர்ந்தார் என்பது முக்கியமான ஒன்று.

author avatar
Parthipan K