திமுக அரசுக்கு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் கடும் கண்டனம்!

0
45

மத்தியஅரசு பெட்ரோல் மீதான வரியை லிட்டருக்கு ஐந்து ரூபாயும் டீசல் மீதான வரியை 10 ரூபாயும் குறைத்தது, இந்த நிலையில்,அதனைப் பின்பற்றி காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்கள் உட்பட நாட்டில் சுமார் 25 மாநிலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை குறைத்து இருக்கின்றன. இந்த சூழ்நிலையில், தமிழக மக்கள் அனைவரும் பெற்றோர் மற்றும் டீசல் மீதான வரிகளை தமிழக அரசு குறைக்கும் என எதிர்பார்த்து இருந்தார்கள்.

இந்தநிலையில், கடந்த 2014ம் வருடத்தில் இருந்த அளவிற்கு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும் எனவும் இதுபோன்ற நடவடிக்கைகள் தானாகவே மாநிலங்களின் வரியை குறைத்து விடும் எனவும், நிதியமைச்சர் தெரிவித்திருப்பது தமிழக மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை வழங்கியிருக்கிறது. பெரும்பாலான மாநிலங்களை விட பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைவாக இருக்கின்ற சூழ்நிலையில் தமிழ்நாட்டில் அதனை செய்வதற்கான சாத்தியமில்லை என்று நிதி அமைச்சர் கூறியிருப்பது வேதனைக்கு உரியது என தெரிவித்திருக்கிறார் ஓபிஎஸ்.

மத்திய அரசின் வரி என்பது நாட்டில் இருக்கின்ற அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும், அனேக மாநிலங்கள் வரியை குறைத்திருக்கிறார் நிலையில் தமிழக அரசு மட்டும் முடியாது என்று தெரிவித்திருப்பது நியாயமற்றது. இதுபோன்ற செயல் பொது மக்களை ஏமாற்றுவதற்கான திட்டம் மத்திய அரசின் இந்த வரி விதிப்பு திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இருந்து தொடர்கிறது இதையெல்லாம் தெரிந்து கொண்டுதானே திமுகவின் தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் குறைக்கப்படும் என்று வாக்குறுதி வழங்கப்பட்டு இருக்கிறது. அதில் ஏதாவது நிபந்தனை வைக்கப்பட்டிருந்ததா? இல்லையே என கூறுகிறார்.

ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு பெட்ரோலுக்கு மட்டும் தானே விலை குறைப்பு ஏற்படுத்தப்பட்டது அதே நேரத்தில் வாக்குறுதியை வழங்காத பல மாநிலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை கணிசமாக குறைத்து இருக்கின்றன.

திமுகவின் இந்த அறிவிப்பு முன்னரே என்னை மட்டும் அளவிற்கு நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக, உயர்ந்து கொண்டே செல்கின்றது. அதோடு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் காய்கறிகள் இதனால் உயர்ந்து கொண்டே செல்கிறது இதன் காரணமாக, பாதிக்கப்பட்டு இருக்க கூடிய பொதுமக்களுக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் இந்த செயல் அமைந்திருக்கிறது என கூறியிருக்கிறார்.

இந்த நேரத்தில் சாதாரண பொதுமக்களை யார் வேண்டுமானாலும் ஏமாற்றிவிட முடியும் என நினைக்காதீர்கள். சாமானியர்கள் நிறைய படிக்காதவர்கள் ஆக இருக்கலாம். அதன் மூலமான பொது அறிவிப்பு பெற்றிருக்கின்றார் வெண்ணி இது சுண்ணாம்பு எது என்ற வித்தியாசம் அவனுக்கு நன்றாக தெரியும் என்ற பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழியை முதலமைச்சருக்கு நினைவூட்ட கடமைப்பட்டிருக்கிறேன் என கூறியிருக்கிறார் ஓபிஎஸ்.