பொதுக்கூட்டத்தில் கெத்து காட்டிய துணை முதல்வர்!

0
132

தமிழகத்திற்கு சட்டசபை தேர்தல் விரைவில் வர இருக்கிறது. அதன் காரணமாக தமிழகத்தில் இருக்கக்கூடிய எல்லா அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி இருக்கிறார்கள். அதேபோல அனைத்துக் கட்சியினரும் அவர்களுக்கு எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்தும் வருகிறார்கள் அதோடு தாங்கள் ஆட்சிக்கு வந்தால் செய்யக்கூடிய நலத்திட்டங்கள் என்னென்ன என்பதையும் பட்டியலிட்டு வருகிறார்கள்.

அந்த வகையில், திருவொற்றியூரில் அதிமுக சார்பாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் எதிர்கட்சியான திமுகவை அரசியலில் இருந்து முழுமையாக ஒதுக்கி வைக்கவே அதிமுக என்ற கட்சியை எம்ஜிஆர் அதிமுக மிகப் பெரிய இரும்பு கோட்டை அதனை எவராலும் அசைக்க இயலாது என்று தெரிவித்திருக்கிறார். அதோடு முதலீட்டாளர்கள் மாநாடு மூலமாக சுமார் 10 லட்சம் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறோம் என்றும் தெரிவித்திருக்கிறார்.

அதேபோல தேர்தல் எப்பொழுது என்று சூசகமாக தேர்தல் ஆணையம் அறிவிப்பதற்கு முன்பிலிருந்தே கொரொனாவையும் பொருட்படுத்தாமல் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்தந்த பகுதிகளில் இருக்கும் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து தமிழகத்தில் நடைபெற்று இருக்கக்கூடிய வளர்ச்சித் திட்டப் பணிகள், கொரோனா தடுப்பு பணிகள், தொடர்பாகவும் அந்தந்த பகுதிகளில் நேரடியாகவே பார்வையிட்டு அங்கே இருக்கக்கூடிய நிறைகுறைகளை கலைந்து வந்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.

அதேபோல காரில் சென்று கொண்டிருக்கும் போது வழியில் கொடுக்கப்படும் அந்த மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து அவர்களின் தேவைகள் என்ன என்பதை தெரிந்து கொண்டு அதனை பூர்த்தி செய்திருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் தூத்துக்குடி வந்திருந்த முதலமைச்சர் அவர்களை சந்திப்பதற்காக மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் கையில் மனுவுடன் ரோட்டோரத்தில் நின்றிருக்க அதை கவனித்த முதலமைச்சர் காரை நிறுத்தச் சொல்லிவிட்டு அந்தப் பெண்ணிடம் மனுக்களை பெற்று கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக சொல்லி சென்றார்.

அந்த பெண்ணும் எல்லோரையும் போல ஏதோ மனு கொடுத்து விட்டோம் நடக்கிறதா என்று பார்ப்போம் என்பதுபோல வீட்டிற்கு வந்துவிட்டார். ஆனால் முதல்வரோ சென்னைக்கு சென்ற கையுடன் உடனடியாக அந்த மனு மீது நடவடிக்கை எடுத்து விட்டார் .மனு கொடுத்த அந்த பெண் தன் வீட்டிற்கு சென்றவுடன் அவர் வீட்டிற்கு ஒரு லெட்டர் வந்திருந்தது அதில் முதல்வரை தங்கள் சந்திக்க சென்னை செல்ல வேண்டும் என்று எழுதப்பட்டிருந்தது. அதோடு தங்களுக்கு வேலை உறுதி ஆகி விட்டது என்றும் சொல்லப்பட்டு இருந்தது இதனை கண்டு மகிழ்ச்சியுற்ற அந்த பெண் உடனடியாக சென்னைக்கு கிளம்பி சென்றார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் அந்தப் பெண்ணிற்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பணியில் சேர்வதற்கான பணி ஆணையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரடியாக வழங்கினார். இதனால் நெகிழ்ந்து போனார் அந்த மாற்றுத்திறனாளி பெண்.

இப்படி எண்ணற்ற இடங்களில் மக்களோடு மக்களாக சாதாரணமாக அவர்களுடன் பழகி அவர்களின் குறை நிறைகளை தெரிந்து கொண்டு அதனை முதலமைச்சர் எடப்பாடி உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுப்பதால் தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும் அதிமுகவிற்கும் சிறப்பான வரவேற்பு இருந்து வருகிறது.