அந்தமான் கடல் பகுதியில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை! அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய இருக்கும் மாவட்டங்கள்!

0
72

அந்தமான் கடல் பகுதியில் கடந்த 13ஆம் தேதி ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி தற்சமயம் தென் கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய அந்தமான் கடற்பகுதியில் நிலை கொண்டிருக்கிறது.

புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்று மேற்கு திசையில் நகர்ந்து ஆலய தினம் தெற்கு ஆந்திரா வட தமிழக கடற்கரையை நோக்கி நகர்வதற்கான வாய்ப்பிருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதனால் தமிழ்நாட்டில் சில பகுதிகளில் கன மழையும், சில பகுதிகளில் மிதமான மழையும், பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

அதனடிப்படையில் இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, அரியலூர், பெரம்பலூர், சேலம், உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு பகுதிகளில் கனமழை மற்ற மாவட்டங்களில் அனேக பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.