சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்! பெண்களே அமைதி கொள்ளுங்கள்!

0
80

தமிழகத்தில் நோய்த்தொற்று பரவல் அதிகமானதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் சிறப்பு தடுப்பூசி முகங்கள் ஏற்படுத்தப்பட்டு கோடிக்கணக்கான பேருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. இதனால் தமிழகத்தில் நோய் தொடர்பான பல்வேறு குறைந்தது.

இந்தநிலையில், புதிய வகை நோய் தொற்றான ஒமைக்ரான் தற்சமயம் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அந்த விதத்தில் இது வரையில் இந்தியாவில் 38 பேருக்கு இந்த நோய்த்தொற்று பரவல் ஏற்பட்டு இருக்கிறது. தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும் இந்த நோய்த் தொற்று பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.

ஆனாலும் தற்போது வரையில் தமிழகத்தில் ஒருவருக்குக்கூட இந்த புதிய வகை நோய்த்தொற்று ஏற்பட வில்லை என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, தமிழக மக்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள். அதே நேரம் அண்டை மாநிலங்களில் இந்த நோய்த்தொற்று பரவல் ஏற்பட்டு இருப்பதால் தமிழகத்திற்கு இந்த நோய்த்தொற்று பரவல் வந்து விடாத வண்ணம் பல நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.

அந்த விதத்தில் இதுதொடர்பாக ஆலோசனை செய்யவும்,நடைமுறையில் இருக்கின்ற ஊரடங்கு உத்தரவை விரிவுபடுத்தவும், நேற்றைய தினம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதியோர் மற்றும் மன நலம் குன்றியோர்காண பிரத்தியேக ஐந்து சிகிச்சை பிரிவு விலை சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் தொடங்கி வைத்தார்கள். இதன் பிறகு அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டியில், இந்த மருத்துவமனையில் மனநலம் குன்றிய நோயாளிகளுக்கான மீட்பு சேவை மையம் ஆரம்பிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல 22 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் ஆரம்பிக்கப்படும் என்று கூறியிருக்கிறார்.

இதற்காக தலா 10 படுக்கைகள் அமைக்கப்பட்டு சிகிச்சை மற்றும் உணவு, உடை, உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படும். பிரசவம் அடைந்த பெண்களில் 22% நபர்களுக்கு மனநிலை மாற்றம் உண்டாகி மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள், இவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை, உடல் பலவீனம், பசியின்மை, தூக்கமின்மை, உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அவர்களுக்கு உரிய ஆலோசனை வழங்கி தங்களையும், தங்களுடைய குடும்பத்தினரையும், எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் என்று தெரிவித்து இருக்கிறார்.