சென்னையை நோக்கி நகரும் மேக கூட்டங்கள்! வெளுத்து வாங்கவிருக்கும் கனமழை!

0
122

கடந்த ஒரு வார காலமாக வங்கக்கடலில் உருவாகி இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழக பகுதியில் உதயமான வறண்ட காற்று காரணமாக, வலுபெறாமல் இருந்தது. கடந்த 4 தினங்களாக தமிழகத்தின் வடகிழக்கு பகுதியில் மெதுவாக கரையை கடந்து வருகிறது.

நேற்று சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நிலை கொண்ட தாழ்வு பகுதி கரை கடந்து விடும் என்று எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதன் வேகம் இன்னும் குறைந்து வருகிறது. நேற்று சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலும் ஆந்திர மாநில எல்லையிலும் மழை விடாமல் பெய்யும் அதன் பிறகு கரையை கடந்து விடும் என்று தமிழகத்தைச் சார்ந்த வெதர்மேன் பிரதீப் கணித்திருந்தார். தற்போது அந்த காற்றழுத்த பகுதி மேலும் தன்னுடைய வேகத்தை குறைத்துக் கொண்டு சென்னையிலேயே தங்கி விட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், இன்று காலை தமிழக வெதர்மேன் பிரதீப் வெளியிட்டுள்ள வானிலை அறிவிப்பு படி காற்றழுத்த தாழ்வு நிலை இன்னும் சென்னையின் வட தமிழக கடற்கரையில் இருக்கிறது. அதோடு அதன் நகர்வு மிகவும் மெதுவாகவும், உறுதியாகவும் இருக்கிறது.

இந்த தாழ்வு நிலையை சுற்றிலும் மூன்று பக்கங்களில் மேகங்கள் இல்லாமல் எலும்புக்கூடு போல காட்சி தருகிறது. ஆனால் காற்றழுத்த தாழ்வு நிலையின் வடமேற்கு பகுதியில் அடர்ந்த மேகங்கள் காணப்படுகின்றன. அதோடு அந்த மேகங்கள் மெதுவாக கடற்கரைக்கு அருகில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலை நோக்கி நகர்கிறது.

சென்ற 4 தினங்கள் மழையின் சித்ரவதையில் முதன்முறையாக இவ்வளவு அடர்த்தியான மேகங்கள் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிக அருகில் வந்திருக்கிறது. இது நிச்சயமாக கடுமையான மழை கொடுத்து நமக்கு மனச்சோர்வை உண்டாக்கும் என்று சொல்லி இருக்கிறார்.

ஆனால் ஒரே ஒரு மன ஆறுதல் என்னவென்றால் சூரியன் வந்துவிட்டது. அதன் வெப்பத்தால் வெப்ப காற்றால் அருகில் வரும் இந்த மேகங்கள் நிலைத்து நிலத்திற்கு செல்ல முடியுமா? என்பது சந்தேகம்தான். அதனால் காற்றழுத்த தாழ்வு நிலை பெறாமல் போவதற்கான வாய்ப்புகள் உண்டு. காற்றின் வேகத்தை பொறுத்து பார்க்கலாம் என்று தெரிவித்திருக்கிறார் வெதர்மேன் பிரதீப்.