டெல்லியில் மறுக்கப்பட்டது! தமிழகத்தில் அணிவகுத்தது!!

0
88

டெல்லியில் மறுக்கப்பட்டது! தமிழகத்தில் அணிவகுத்தது!!

குடியரசு தினத்தன்று டெல்லியில் ராணுவ மற்றும் காவல்துறை அணிவகுப்பு நடைபெறும். அதேப்போல் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் இருந்தும் அலங்கார ஊர்திகள் தயார் செய்யப்பட்டு இந்த அணிவகுப்பில் கலந்து கொண்டு அணிவகுத்து வருவது வழக்கம்.

அந்த அலங்கார ஊர்திகளில் அந்தந்த மாநிலங்களின் கலாச்சாரத்தை போற்றும் வகையிலும் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் தியாகிகளை நினைவு கூறும் விதமாகவும் அந்தந்த மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் தயார் செய்யப்பட்டு டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா அலங்கார ஊர்தி அணிவகுப்பில் கலந்து கொண்டு அணிவகுத்து வரும்.

அந்த வகையில் இந்த ஆண்டு டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா அலங்கார ஊர்தி அணிவகுப்பில் இருந்து தமிழகத்தின் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த அறிவிப்பு தமிழகத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. மேலும் தமிழக அரசு மற்றும் தமிழக அரசியல் கட்சிகள் மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்தன.

மத்திய அரசின் இந்த அறிவிப்பை தொடர்ந்து டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பங்கேற்கவிருந்து அனுமதி மறுக்கப்பட்ட அந்த அலங்கார ஊர்திகள் சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்கும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் குடியரசு தினவிழாவையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அதன்பின் கவர்னர் ஆர்.என்.ரவி, முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை மற்றும்  காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

இதையடுத்து டெல்லி அணிவகுப்பில் நிராகரிக்கப்பட்ட தமிழக அரசின் ஊர்தி உள்பட 4 ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது. அந்த அணிவகுப்பு ஊர்திகளில் வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், பாரதியார், வ.உ.சி.சிதம்பரனார், வீரபாண்டிய கட்டபொம்மன், காமராஜர் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் உள்ளிட்டோரின் சிலைகள் இடம்பெற்று இருந்தன.

author avatar
Parthipan K