சபரிமலை என்ற பெயரை பயன்படுத்த அனுமதி மறுப்பு! ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு! 

0
130
Denial of permission to use the name Sabarimala! Action order put by the court!
Denial of permission to use the name Sabarimala! Action order put by the court!

சபரிமலை என்ற பெயரை பயன்படுத்த அனுமதி மறுப்பு! ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு!

வருடத்தில் கார்த்திகை மாதம் வந்தாலே கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலையிட்டு  லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று தரிசனம் செய்வர். கேரளாவில் இந்த கார்த்திகை மாதம் மட்டும் மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படும். இச்சூழலில் பக்தர்கள் பலர் மாலை போட்டு ஐயப்பனை வழிபட்டு வருவர். இவர்களுக்காக அரசானது , சிறப்பு பேருந்துகளை இயக்கியுள்ளது. மேலும் பக்தர்களின் வசதிக்காக கேரளாவில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளனர்.

இதனை மையமாக வைத்து தனியார் நிறுவனம் ஒன்று கொச்சியில் இருந்து சபரிமலைக்கு ஹெலிகாப்டர் சேவை மூலம் செல்லலாம் என்று விளம்பரம் செய்துள்ளது. சமூக வலைத்தளம் என தொடங்கி போஸ்டர் வரை இந்த விளம்பரம் கொச்சியில் வைரலாக பரவி உள்ளது. இதை பார்த்த பக்தர்கள் பலரும் ஹெலிகாப்டரில் செல்ல முன்பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் இந்த தனியார் நிறுவனம் ஹெலிகாப்டரில் கூட்டி சென்று விடுவது மட்டுமின்றி,விஐபி முறையில் ஐயப்பன் தரிசனம் காண வரை பல ஏற்பாடுகளை செய்து தருகிறதாம். அவ்வாறு ஹெலிகாப்டரில் கூட்டி சென்று விஐபி தரிசனம் செய்ய ரூ 45 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வசூல் செய்வதாக கூறுகின்றனர். இதனை அறிந்த நீதிமன்றம் அந்த நிறுவனத்தின் மீது வழக்கு தொடுத்தது.

இந்த வழக்கானது நேற்று அமர்வுக்கு வந்தது. சபரிமலை ஐயப்பன் கோவில் தேவசம் அனுமதி இன்றி இவ்வாறு தனியார் நிறுவனம் விளம்பரம் செய்யக்கூடாது என்று கண்டித்தது. அதேபோல நீங்கள் விளம்பரம் செய்ய வேண்டும் என்றால் சபரிமலை என்ற பெயரை உபயோகம் செய்யக்கூடாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளது. தனியார் நிறுவனத்தை சார்ந்த வக்கீல், நாங்கள் செய்தது குற்றம்தான். தற்பொழுது சபரிமலை என்ற பெயரில் எந்த ஒரு விளம்பரமும் படுத்தவில்லை என்று கூறினார்.