அனுமதி மறுப்பு! கமல்ஹாசன் குற்றச்சாட்டு!

0
74

பல்வேறு இடங்களில் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்கப்படாததால் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் குற்றம்சாட்டி இருக்கின்றார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து உரையாடிய கமல்ஹாசன், தமிழ் நாட்டில் வேலை இல்லா திண்டாட்டம் முற்றிலும் ஒழியவேண்டும் நேர்மையான கொள்கைகளை கொண்டு மக்கள் நீதி மையம் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருக்கின்றது. நாங்கள் வெற்றி பெற்றால் பெண்களுக்கு ஊதியம் அளிக்கப்படும். அரசியல் கூட்டங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கி இருக்கும்போது பல இடங்களில் நாங்கள் பிரச்சாரம் செய்வதற்கு அனுமதி கிடைக்கவில்லை என்று ஆதங்கம் தெரிவித்தார்.

எதிர்வரும் தேர்தலை மனதில் வைத்து மக்கள் நீதி மையம் தன்னுடைய பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டது. அரசியல் கூட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி வழங்குவதற்கு முன்னரே கமல்ஹாசன், தன்னுடைய பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டதால், பல்வேறு இடங்களில் பிரச்சாரம் செய்வதற்கு அவருக்கு காவல்துறையினர் தடை விதித்தனர். மைக்கில் பேசக்கூடாது என்ற காரணத்தினால், கமலஹாசன் வெறும் கையை மட்டும் அசைத்தபடியே திறந்தவெளி காரில் சென்று கொண்டிருந்தார். இதனை தொடர்ந்து 19ஆம் தேதி முதல் அரசியல் கூட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. ஆனாலும் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்கப்படுவதாக கமல்ஹாசன் தன்னுடைய குற்றச்சாட்டை முன் வைத்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

இதற்கிடையே ஆளும் தரப்பினரை கடுமையாக விமர்சனம் செய்து வரும் காரணத்தால்தான், கமலஹாசன் அவர்களுக்கு பிரச்சாரம் செய்வதற்கான அனுமதி மறுக்கப்படுகின்றது என்று மக்கள் நீதி மையம் சார்பாக குற்றம்சாட்டப்பட்டு வருகின்றது.