மத்திய அரசின் வேளாண் சட்டங்கள்! தமிழகத்தில் அதிகரிக்கும் போராட்டம்!

0
67

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் 19 ஆவது நாளாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள் இது குறித்து விவசாய சங்கங்கள் மற்றும் மத்திய அரசுக்கு இடையே நடைபெற்ற பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் இந்த சட்டங்களில் திருத்தம் கொண்டு வருவதற்கு சம்மதம் தெரிவிப்பதாக மத்திய அரசு அறிவித்தது. ஆனாலும் இதனை நிராகரித்த விவசாய சங்கங்கள் அந்த சட்டங்களை முழுமையாக வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தி போராடி வருகிறார்கள்.

இதற்கிடையே இன்றைய தினம் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரத போராட்டம் நடத்த வேண்டும் என்று நாட்டில் இருக்கின்ற அனைவருக்கும் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு அழைப்பு விடுக்கின்றது.

இந்தநிலையிலேயே மன்னார்குடியில் நேற்றையதினம் செய்தியாளர்களிடம் உரையாடிய தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் மத்திய அரசின் விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தி டெல்லியை முற்றுகையிட்டு பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனாலும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று விவசாய சட்டங்களை திரும்பப் பெற வேண்டிய மத்திய அரசு பல அவதூறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றது விவசாயிகள் உடைய இந்த போராட்டத்தை பிளவுபடுத்தும் மத்திய அரசின் இந்த முயற்சி கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்திருக்கின்றார்.

மத்திய மந்திரி பியூஷ் கோயல் விவசாயிகள் போராட்ட களத்தில் தீவிரவாதிகளும் நுழைந்திருக்கிறார்கள் என ஒரு மிகப்பெரிய பொய்யை கூறி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும், இதனை அவர் வாபஸ் பெற வேண்டும் நியாயமான கோரிக்கையை ஏற்று சட்டத்தை வாபஸ் பெறுவதற்கு பிரதமர் உடனடியாக விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தி இருக்கின்றார் பி.ஆர். பாண்டியன்.

விவசாயிகளுடைய இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதிலும் போராட்டங்கள் வேகம் எடுத்து வருகின்றன. போராட்ட குழு அறைகூவலுக்கு இசைவு கொடுத்து தமிழ்நாட்டிலும் சுங்கச்சாவடிகளை தடுத்து நிறுத்துவது, ரயில் நிலையங்கள், மற்றும் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவது, என்று விவசாயிகள் ஆரம்பித்திருக்கிறார்கள்.

வரும் 18ஆம் தேதி காலை 10 மணி அளவில் இதனை வலியுறுத்தி தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பாக சென்னை ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட இருக்கின்றோம். பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்க இருக்கிறார்கள் என்று அறிவித்திருக்கிறார்கள் விவசாய சங்கங்கள்.