இயல்பு நிலைக்கு திரும்பிய டெல்லி! வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி ..!!

0
101

இயல்பு நிலைக்கு திரும்பிய டெல்லி! வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி ..!!

சிஏஏ ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் இருவருக்குமிடையே ஏற்பட்ட வன்முறையின் காரணமாக வடகிழக்கு டெல்லியில் வாகனங்களுக்கு தீவைப்பு, பொதுமக்கள் இறப்பு, போலீசார் இறப்பு போன்ற அசம்பாவிதங்கள் நடந்து முடிந்த நிலையில் தற்போது, டெல்லி இயல்பான நிலைக்கு மாறி வருகிறது. நேற்றே பல்வேறு கடைகள் திறக்கப்பட்ட வழக்கம்போல இயங்க ஆரம்பித்தன.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது: டெல்லியில் நடந்த வன்முறை மிக மோசமான சம்பவம், நேற்றைய சனிக்கிழமை எந்தவித அசம்பாவிதங்களும் நடக்கவில்லை என்பதை கூறினார். இயல்பான அமைதியினை மீட்டெடுப்பதே எங்களின் முதல் வேலை என்றும் தெரிவித்தார். மேலும், வன்முறை நடந்த போது 4 துணைப்பிரிவுகள் பாதிக்கப்பட்டது சம்பவத்தை கட்டுப்படுத்த 18 எஸ்டிஎம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

எஸ்டிஎம் குழுக்களின் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகள் ஆய்வு செய்யப்பட்டதாகவும், கடை மற்றும் வீடுகள் சேதமடைந்தது பற்றியும் கணக்கிடப்பட்டுள்ளதாகவும் கூறினார். இந்த வன்முறையில் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கான இழப்பீடு வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவித்த நிலையில், பெறப்பட்ட 69 படிவங்களுக்கான ரொக்கப்பணம் தலா ரூபாய் 25000 நாளை (இன்று) வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

வன்முறையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்குமிடம் மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்பாடு செய்யதுள்ள நிலையில், டெல்லி பகுதிகளில் இருந்து வெளியேறிய மக்களை மீ்ண்டும் அழைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
நடந்து முடிந்த அசாதாரண சூழல்களின் காரணமாக அங்கிருக்கும் அரசு பள்ளிகளுக்கு மார்ச் 7 ஆம் தேதி வரை தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.

தவறான செய்திகளை பரப்பிய ஊடகங்களின் புது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வன்முறையில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் 10 லட்சம் அளிப்பதாக அறிவித்திருந்தார். கலவரத்தில் எரிக்கப்பட்ட ரிக்‌ஷாக்களுக்கு ரூ.25000 இழப்பீடும் மற்றும் எரிக்கப்பட்ட வீடு, கடைகளுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடும் அறிவித்துள்ளார். மேலும் சிறிய, பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா 3 லட்சம், 2 லட்சம் அளவிற்கு இழப்பீடு வழங்குவதாகவும் கூறியுள்ளார்.

டெல்லியில் நடந்த வன்முறை இந்திய அளவில் மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது, விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பி ஒற்றுமை மேம்பட வேண்டும் என்பதே பலரின் எதிர்ப்பார்ப்பாக இருந்து வருகிறது. இனி எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க டெல்லி ஷாஹீன் பாக்கில் 144 தடை இருப்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Jayachandiran