பட்டையை கிளப்பிய ஜோஸ் பட்லர்! தவிடு பொடியாகிய ராஜஸ்தான்!!

0
92

டெல்லியில் நேற்று நடைபெற்ற 28வது ஐபிஎல் போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கும் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகளுக்கும் நடைபெற்றது.

இதில் முதலாவதாக பேட் செய்த ராஜஸ்தான் அணி ஆரம்பம் முதலே அதிரடியை கிளப்பியது அதில் தொடக்க வீரரான ஜோஸ் பட்லர் 64 பந்துகளில் 124 ரங்களுடன் 4 போர்கள் 6 சிக்சர்கள் அடங்கும். மேலும் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் அவர்கள் 33 பந்துகளில் 48 ரன்கள் 2 சிக்ஸர்கள் அடித்து அணியின் ரன்களை உயர்த்தினர். அதிரடியாக விளையாடி ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தொடக்கத்தில் சிறப்பாக விளையாடிய மனிஷ் பாண்டே 20 பந்துகளில் 36 ரன்களும் ஜானி பேர்ஸ்டோ 21 பந்துகளுக்கு 30 ரன்களும் அடுத்து களமிறங்கிய கேன் வில்லியம்சன் கேப்டன் 20 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தனர்.

பின்னர் அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்னில் அவுட் ஆகினர் விஜய்சங்கர் 8 ரன்களிலும் ,கேதர் ஜாதவ் 19 ரன்களிலும், முகமது நபி 17 ரன்களிலும், அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர் இதையடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் இந்நிலையில் 8 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

இந்த வெற்றியின் மூலம் டெல்லி கேபிடல்ஸ் அணி புள்ளி பட்டியலில் 8 போட்டிக்கு 6 போட்டியை வெற்றி பெற்று இரண்டு தோல்வியடைந்து புள்ளி பட்டியலில் 12 புள்ளிகள் பெற்று முதலாவது இடத்தை பிடித்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் 7 போட்டிகளில் விளையாடி மூன்றில் வெற்றி பெற்று 4 தோல்வியடைந்து புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

author avatar
Parthipan K