காஜல் அகர்வாலுக்கு பதில் பாலிவுட் நடிகையா?… இந்தியன் 2 படத்தின் புதிய அப்டேட்!

0
89

காஜல் அகர்வாலுக்கு பதில் பாலிவுட் நடிகையா?… இந்தியன் 2 படத்தின் புதிய அப்டேட்!

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கிய இந்தியன் 2 திரைப்படம் இன்னும் முடிக்கப்படாமல் உள்ளது.

உலகநாயகன் கமல்ஹாசன்  நடிப்பில் 1996ம் ஆண்டுவெளிவந்த திரைப்படம் இந்தியன். இயக்குனர் ஷங்கர் இந்த திரைப்படத்தை இயக்கியிருப்பார். ஏ.எம்.ரத்னம் இந்த திரைப்படத்தை தயாரித்தார்.

இந்த படத்தில் மனிஷா கொய்ராலா, கவுண்டமணி, சுகன்யா, செந்தில் ஆகியோர் நடித்துள்ளனர். கமல்ஹாசன் இந்த படத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருப்பார். இதையடுத்து சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஆரம்பிக்கப்பட்டது.

படத்தில் கமல்ஹாசனுடன் காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், சித்தார்த் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் 60 சதவீதம் முழுமையடைந்துள்ளது.சில நாட்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்து மற்றும் தயாரிப்புப் பிரச்சனைகள் மற்றும் பல காரணங்களுக்காக இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நடிகர் கமல்ஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தில் நடித்து அந்த படம் ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் இப்போது  இந்தியன் 2 திரைப்படத்தை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. படத்தைத் தொடங்குவதில் உதயநிதி ஸ்டாலின் ஆர்வம் காட்டிவரும் நிலையில் படத்தை லைகாவிடம் இருந்து கைப்பற்றி மீதிப்படத்தைத் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் லைகா நிறுவனத்துடன் இணைந்து உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனமும் இடம்பெறும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள காஜல் அகர்வால் தற்போது திருமணம் ஆகி குழந்தைக்கு தாயாகியுள்ளதால், அவர் இந்த படத்தில் இருந்து விலகலாம் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அவர் நடித்த காட்சிகளை மீண்டும் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனை வைத்து ஷங்கர் படமாக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.