ஒரு பட்டனை கிளிக் செய்தால் போதும்!! இருந்த இடத்திலேயே பத்திரப்பதிவு செய்யலாம்!!

0
111
#image_title
ஒரு பட்டனை கிளிக் செய்தால் போதும்!! இருந்த இடத்திலேயே பத்திரப்பதிவு செய்யலாம்!!
பத்திரப்பதிவை எளிமையாக்க ‘ஸ்டார் 3.O’ எனும் புதிய திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளார்.
பத்திரப்பதிவுத்துறை லஞ்சம் :
தமிழகமெங்கும் பத்திரப்பதிவுத்துறை அலுவலகங்களில் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. பத்திரப் பதிவுத்துறை அலுவலர்கள் லட்சக்கணக்கில் லஞ்சம் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பத்திரப்பதிவுத் துறையில் லஞ்சமும், ஊழலும் பெருகி விட்டதாக புகார் கூறப்படுகிறது.
மேலும், பட்டா – சிட்டா மாறுதலுக்கு வருவாய் துறை அலுவலர்களும் ஆயிரக்கணக்கிலும், லட்சக்கணக்கிலும் லஞ்சம் கேட்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே இதனை சரி செய்யும் பொருட்டு அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஒரு சில இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் உதவி உடன் அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாகும் பொதுமக்கள் தரப்பில் புகார் கூறப்படுகிறது.
இந்நிலையில் இனி பட்டா சிட்டா மாறுதலுக்கு ஆன்லைன் மூலம் மக்கள் விண்ணப்பித்து பட்டா சிட்டா பெறலாம் என்ற புதிய நடைமுறை வரவுள்ளது.
இதற்கு ஸ்மார்ட் 3.0 என்று பெயரிடப்பட்டுள்ளது. அதாவது, பத்திரப்பதிவை எளிமையாக்க ‘ஸ்டார் 3.O’ எனும் புதிய திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளார். இந்த மாற்றம் பத்திரப்பதிவுத் துறையைப் பொறுத்தவரைப் பெரிய புரட்சி என்று பத்திரப்பதிவுத்துறை வல்லுனர்கள் சில கருத்து கூறுகின்றனர்.
இந்நிலையில், இதற்காக பதிவுத்துறைத் தலைவர் சிவன் அருள் புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தார். அதன்படி, ‘ஸ்டார் 3.O’ திட்டத்துக்கு மென்பொருள் எளிமையாக்கல் குழு, சென்னை மண்டல டி.ஐ.ஜி. சேகர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் 31ஆம் தேதிக்குள் இந்தக் குழு அரசுக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும். அந்தக் கருத்தின்படி அரசு தன் இறுதி ஒப்புதலை வழங்கும் என்று கூறப்படுகிறது.
author avatar
CineDesk