சசிகலா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆவது தொடர்பாக இன்றைய தினம் முடிவு!

0
53

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து வந்த சசிகலாவிற்கு உடல் நல குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து, அவர் சிறை வளாகத்திற்கு அருகில் இருக்கக்கூடிய அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் .அங்கு அவருக்கு தீவிர மருத்துவ சிகிச்சைகள் கொடுக்கப்பட்டது. அதோடு அவருக்கு அங்கேயே மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா இருப்பது உறுதியானது.

இதனைத் தொடர்ந்து, சசிகலா சென்ற பத்து தினங்களாக மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகின்றார் .இதற்கிடையே அவருடைய தண்டனை காலம் முடிவடைந்து விட்ட காரணத்தால், சிறை நிர்வாகம் அவரை விடுதலை செய்தது. அதனை தொடர்ந்து அவர் தற்போது சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையில் அவருடைய உடலில் ரத்த அழுத்தம் மீண்டும் அதிகரித்ததாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், கொரோனா அறிகுறிகள் இல்லாவிட்டாலும் கொரோனாவிற்க்காக சிகிச்சை பெற்றுவரும் சசிகலா உடல்நிலை சீராக இருப்பதாக விக்டோரியா மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

சென்ற ஐந்து தினங்களாக செயற்கை சுவாச கருவி இல்லாமல் சசிகலா தானாக சுவாசிக்கத் தொடங்கி இருக்கிறார் எனவும், இரத்தத்தில் இருக்கக்கூடிய ஆக்சிஜனின் அளவு சீராக இருப்பதாகவும், அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், சசிகலாவை டிஸ்சார்ஜ் செய்வது தொடர்பாக சிறப்பு மருத்துவர்கள் குழு இன்றையதினம் முடிவு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.