நோய்த் தொற்று பாதிப்பு சிகிச்சையில் இருப்போரின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 1.42 லட்சம்! சுகாதாரத் துறையை வெளியிட்ட தகவல்!

0
37

தமிழ்நாட்டில் நேற்றைய தின நோய் தொற்று பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் புதிதாக 1,39,559 பேருக்கு நோய் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 14,197 ஆண்கள் மற்றும் 9 ,578 ஆண்கள் என்று ஒட்டு மொத்தமாக 23,975 நபர்களுக்கு புதிதாக நோய் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது என்று கூறப்பட்டிருக்கிறது. இதில் அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் 8 ,987 பேரும். செங்கல்பட்டில் 2701 பேர் கோவையில் 1,866 பேரும், பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். குறைந்த பட்சமாக அரியலூர் மாவட்டத்தில் 73 பேரும், புதுக்கோட்டையில் 52 பேரும், பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் நேற்று வெளி மாநிலங்களில் இருந்து வந்த 18 பேர் உட்பட 12 வயதுக்கு உட்பட்ட 705 குழந்தைகளுக்கும், 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் 3, 825 பேருக்கும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

அதிக ஆபத்தான மற்றும் அதிக ஆபத்து இல்லாத நாடுகளில் இருந்து இதுவரையில் தமிழ்நாட்டிற்கு வந்த 35 ,277 பேருக்கு நோய் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இவர்களில் 381 பேருக்கு இதுவரையில் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த விதத்தில் தற்சமயம் வரையில் 29 மாவட்டத்தில் 240 பேருக்கு புதிய வகை நோய் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு இருக்கிறது, இதில் எல்லோரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இதுவரையில் 29 லட்சத்து 39 ஆயிரத்து 923 பேருக்கு நோய் தொற்று செய்யப்பட்டிருக்கிறது. அதில் 12 வயதிற்கு உட்பட்ட 1,11082 குழந்தைகளும் 60 வயதிற்கு மேற்பட்ட 4 ,25 ,119 முதியவர்களும் இடம் பெற்றிருக்கிறார்கள்.

நோய்தொற்றுக்கு தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனையில் 11 பேரும், தனியார் மருத்துவமனையில் 11 பேரும் ,என்று 22 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று பலியானார்கள். அதில் அதிகபட்சமாக சென்னையில் 10 பேரும், திருவள்ளூரில் 3 பேரும், செங்கல்பட்டு கோயம்புத்தூர், காஞ்சிபுரம், கரூர், மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, வேலூர், திருச்சி, உள்ளிட்ட பகுதிகளில் தலா ஒருவரும் என்று 11 மாவட்டங்களில் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் இதுவரையில் ஒட்டுமொத்தமாக 36 ,989 பேர் நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழந்து இருக்கிறார்கள்.

நோய் தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 12 ,484 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருக்கிறார்கள், இதில் அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் 6,018 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,506 பேரும், திருவள்ளூரில் 687 பேரும், அடங்குவர் இதுவரையில் 27, 60,458 பேர் குணம் அடைந்து இருக்கிறார்கள். அதேபோல 1,42,476 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள் என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருக்கிறது.