கண் சொட்டு மருந்தால் உயிரிழப்பு! சென்னை மருந்து நிறுவனத்தில் நள்ளிரவில் சோதனை! 

0
184

கண் சொட்டு மருந்தால் உயிரிழப்பு! சென்னை மருந்து நிறுவனத்தில் நள்ளிரவில் சோதனை! 

அமெரிக்காவில் கண் சொட்டு மருந்தால் உயிரிழப்பு மற்றும் பார்வை இழப்பு ஏற்பட்டதால் சென்னை மருந்து நிறுவனத்தில் நள்ளிரவு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

சென்னை சேர்ந்த மருந்து நிறுவனத்தால் உயிரிழப்புகள் மற்றும் பார்வை இழப்புகள் ஏற்படுவதாக அமெரிக்காவால் குற்றம் சாட்டப்பட்டது. இதனால் தமிழக மருந்து கட்டுப்பாட்டாளர் மற்றும் மத்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணைய உறுப்பினர்கள், குளோபல் பார்மா ஹெல்த்கேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் நள்ளிரவு  திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.

கண் சொட்டு மருந்துகள் எதிர்ப்பு பாக்டீரியாவால் மாசுபட்டு உள்ளதாக அமெரிக்க நாட்டின் சுகாதார பாதுகாப்பு நிறுவனம் கூறியது. இதனால் அமெரிக்க சந்தையில் இருந்து செயற்கை கண்ணீர் மசகு எண்ணெய் கண் சொட்டு மருந்துகளை தானாக முன்வந்து திரும்பப் பெற்றது.  இந்த கண் சொட்டு மருந்தால் நிரந்தர பார்வை இழப்பு மற்றும் ரத்தத்தில் தொற்றுகள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் என கூறி உள்ளது.

மேலும் நுரையீரல் மற்றும் காயங்களில் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். ஆன்ட்டிபயாடிக் எதிர்ப்பின் காரணமாக சமீப காலத்தில் கிருமி சிகிச்சை அளிப்பது கடினமாக உள்ளது என இன்சைடர் இணையதளம் வெளியிட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து தமிழ்நாடு மருந்துக் கட்டுப்பாட்டாளர் டாக்டர் பி வி.விஜயலட்சுமி என்.டி.டிவியிடம் கூறும் போது அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்ட தொகுப்புகளில் இருந்து, பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்களின் மாதிரிகளை நாங்கள் சேகரித்துள்ளோம். மேலும் அமெரிக்காவில் இருந்து மாதிரிகளுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். நான் அரசிடம் முதற்கட்ட அறிக்கையை தாக்கல் செய்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார். மேலும்  இந்த நிறுவனத்திற்கு மருந்து தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி உரிமம் உள்ளதாக விஜயலட்சுமி உறுதி செய்தார்.

சர்ச்சையில் சிக்கி உள்ள குளோபல் ஃபார்மா ஹெல்த்கேர் அமெரிக்கா உணவு மற்றும் மருந்து நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதாக தெரிவித்துள்ளது. மேலும் அமெரிக்காவில் உள்ள நுகர்வோர்கள் இந்த கண் சொட்டு மருந்தை பயன்படுத்துவதை நிறுத்துமாறு கூறியுள்ளது. பாதகமான விளைவுகளை அனுபவிப்பவர்கள் உடனடியாக மருத்துவ உதவிகளை நாடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் இணையதளம் மற்றும் ஹெல்ப் லைன் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையங்கள் குளோபல் ஃபார்மா தயாரித்த செயற்கை கண் சொட்டு மருந்து பாட்டில்களை சேகரித்து சோதனை செய்து வருகிறது.  இதுவரை கண் சொட்டு மருந்தால் பாதிக்கப்பட்ட 11 பெயர்களில் ஐந்து பேர் நிரந்தர பார்வை இழப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சிடிசி செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.