கெடு விதித்த சசிகலா! என்ன செய்யப்போகிறார் டிடிவி தினகரன்?

0
154

என்ன செய்யவிருக்கிறார் சசிகலா இன்று தான் தற்சமயம் தமிழக அரசியலில் மிகப்பெரிய கேள்வியாக இருந்துவருகிறது திமுக விற்கு போட்டியாக அழகிரி சென்னை அண்ணா சாலையில் மவுன ஊர்வலம் நடத்திய சமயத்தில் ஆதரவில்லாமல் மதுரைக்குச் சென்றார் .அதன் பிறகு தலையை தூக்கி தன் தோளில் வைத்து தூக்கி காட்டுகிறேன் என்று புதிய கட்சியின் அறிவிப்பை வெளியிட்டார் நான் யார் என்று காலம் பதில் சொல்லும் என்று அவ்வப்போது தெரிவித்து வந்தார்.

இருந்தாலும் சசிகலா அரசியலை அவர் பாணியில் எடுத்துக்கொள்ள இயலாது. சொல்லப்போனால் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை தன்னுடைய கைப்பிடிக்குள் வைத்திருந்தவர் சசிகலா. தமிழகம் முழுவதுமே அதிமுகவின் தொண்டர்கள் முதல், பிரமுகர்கள் வரை அனைவரையும் தன் உத்தரவிற்கு கீழ்படிந்த படிதான் வைத்திருந்தார். நான்கு மணி நேர பயணத்தை தன்னுடைய வரவேற்பு நிகழ்ச்சி என்று காட்டுவதற்கு சுமார் 23 மணி நேரம் கழித்து சென்னை திரும்பியிருக்கிறார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் 25ஆம் தேதி நடைபெற உலக கட்சியின் பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் அறிவிப்பு வெளியிட்டார். இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்திருப்பதாவது, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மக்களுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தவர், பல சமயங்களில் அவர்களுக்காக குரல் கொடுத்தவர், அவருடைய வழியில் செயல்பட்டு வரும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் அவனது கழகத்தின் துணைத் தலைவர் அன்பழகன் தலைமையில் பிப்ரவரி மாதம் 25 ஆம் தேதி காலை 9 மணி அளவில் தொடங்கும் என்று தெரிவித்தார்.

அதிமுகவை மீட்பது தொடர்பாகவும், சசிகலாவை சேர்த்து ஒண்றிணைப்பது தொடர்பாகவும்,ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி வரையில் சசிகலா நேரம் கொடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. பிப்ரவரி மாதம் 24 பின்னர் வேறு வழியில்லை என்னுடைய நேரடி அரசியலை தமிழகத்தில் இருக்கும் அனைவரும் காண்பீர்கள் என அவருக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்து இருப்பதாக ஒரு தகவல் கிடைத்திருக்கிறது.

கொரோனா வைரஸ் வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் முறையாக பின்பற்றி அவ்வாறு தமிழ்நாட்டின் 10 இடங்களில் காணொளி மூலமாக நடைபெறும் இந்த செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களில் கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் எல்லோரும் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கிறார் இந்த கூட்டத்தில் சசிகலா பங்கேற்பது தொடர்பாக இதுவரையில் எந்த ஒரு தகவலும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகி இருக்கிறது.