மீண்டு(ம்) வருகிறார் டிவில்லியர்ஸ்; மீட்சிப் பெறுமா தென் ஆப்பிரிக்கா ?

0
82

மீண்டு(ம்) வருகிறார் டிவில்லியர்ஸ்; மீட்சிப் பெறுமா தென் ஆப்பிரிக்கா !

கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக தென் ஆப்பிரிக்கா சூப்பர் ஸ்டார் பேட்ஸ்மேன் ஏ பி டிவில்லியர்ஸ் மீண்டும் அந்நாட்டுக்காக விளையாடவுள்ளார்.

தென் ஆப்பிரிக்க அணியின் சாம்பியன் பேட்ஸ்மேனான டிவில்லியர்ஸ் இரு ஆண்டுகளுக்கு முன் சர்வதேசக் கிரிக்கெட்டுக்கு முழுக்குப்போட்டார். அந்நாட்டு வாரியத்துக்கும் அவருக்கும் இடையே எழுந்த பிரச்சனைகளே இதற்குக் காரணம். ஆனால் அதன் பின் இந்த ஆண்டு நடந்த உலகக்கோப்பை போட்டியில் விளையாட அவர் ஆர்வம் காட்டினார். ஆனால் வாரியம் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. தென் ஆப்பிரிக்க அணியும் மிக மோசமாக விளையாடி லீக் போட்டியிலேயே வெளியேறியது.

இந்நிலையில் இந்த ஆண்டு தொடங்க இருக்கும் டி 20 உலகக்கோப்பையில் அவர் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டூ பிளசீஸ் இது குறித்து டிவில்லியர்ஸோடு பேச்சுவார்த்தை நடத்தினார். தென் ஆப்பிரிக்க அணியும் ஆம்லா போன்ற வீரர்களின் ஓய்வால் மிகவும் பலவீனமடைந்துள்ளது.  இந்நிலையில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்துக்கு பொறுப்பேற்றுக் கொண்டுள்ள கிரீம் ஸ்மித் மற்றும் மார்க் பவுச்சர் ஆகியோர் இப்போது டிவில்லியர்ஸை மீண்டும் அணிக்குள் கொண்டுவர சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இதனால் இந்த ஆண்டு நடக்கும் டி 20 உலகக்கோப்பை போட்டியில் டிவில்லியர்ஸ் விளையாடுவார் என தெரிகிறது. அதறகான பணிகளை இப்போது அவர் மேற்கொண்டு வருவதாகத் தெரிகிறது. இந்நிலையில் அவர் டி 20 மட்டுமில்லாமல் ஒருநாள் போட்டிகளிலும் விளையாட ஆர்வமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் டெஸ்ட் போட்டிகளில் அவர் மீண்டும் விளையாடுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றே தெரிகிறது.

டிவில்லியர்ஸின் மீள்வரவு அந்நாட்டு ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் உலகக் கிரிகெட் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

author avatar
Parthipan K