நெசவு கூலித் தொழிலாளியின் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு 1330 திருக்குறளை ஒப்புவிக்கும் திறன்!

0
118
#image_title

ஓமலூர் அருகே உள்ள நெசவு கூலித் தொழிலாளியின் மகள் அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவி 1330 திருக்குறளை ஒப்புவிக்கும் திறன் பெற்று பாராட்டு மேலும் அதிகாரத்தை கூறினால் குறல் கூறும் திறனும் அவரிடம் உள்ளது பல்வேறு திறமைகளை கொண்ட மாணவியை ஆசிரியர் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டிய வருகின்றனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காடையாம்பட்டி தாலுக்கா செம்மாண்டப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் இவர் தனது வீட்டிலேயே பட்டு நெசவு தொழில் செய்து வருகிறார்.

இவருக்கு பூமா என்ற மனைவியும் தீக்சிகா என்ற 11 வயது மகள் மற்றும் நான்கு வயது மகன் உள்ளனர் இந்த நிலையில் இவரது மகள் செம்மாண்டப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.

இவர் நான்காம் வகுப்பு படிக்கும் போது கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் விடுமுறை விடப்பட்டு ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டது. அப்போது இவர் தனது வீட்டில் திருக்குறளை படித்து வந்தார் தொடர்ந்து இவருக்கு 1330 திருக்குறளும் முழுமையாக மனப்பாடம் செய்து கூறும் திறன் கொண்டுள்ளார்.

அது மட்டுமல்லாமல் திருக்குறளில் அதிகாரத்தை கூறினால் அதில் இருந்து குறல்கள் கூறும் திறன் திருக்குறள் ஆரம்பிக்கும் வார்த்தை கூறினால் குரல் கூறும் திறன் ஆகியவைகளை கொண்டுள்ளார்.

மேலும் திருக்குறள் இடையிடையே எங்கு எந்த எண் கூறினாலும் அக்குறலை மலமளவென கூறும் திறன் படைத்துள்ளார் திருக்குறள் மட்டுமில்லாமல் பேச்சுத்திறமை, ஹிந்தியில் நான்காம் நிலை படித்துள்ளார்.

தொடர்ந்து மனம் செய்யும் திறன் சாதனைகளை படைத்துள்ளார் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல பரிசுகளையும் பெற்றுள்ளார் திருக்குறள் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டியில் கலந்து கொண்டு அஜிட் வேர்ல்ட் ரெக்கார்ட் சான்றிதழ் உள்ளிட்ட பல ரெக்கார்ட்ஸ் இடம் பெற்றுள்ளார்.

திறமைகளை பல இடங்களில் வெளிப்படுத்தி பல்வேறு தனியார் அமைப்புகளிடமிருந்து விருதுகளையும் பெற்றுள்ளார் தொடர்ந்து அவர் பள்ளியில் நன்கு படிக்கும் மாணவியாக இருந்து நன்கு படித்து வருகிறார்.

அவரை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். இதுகுறித்து அவருடைய பள்ளியின் தலைமை ஆசிரியர் போதம்மாள் கூறும் பொழுது கொரோனா பெருந் தொற்று விடுமுறையின் காலத்தில் மாணவர்களை ஊக்குவிக்கும் விதத்தில் அவ்வப்போது திருக்குறள் உள்ளிட்ட பாடங்களை அவர்களுக்கு கொடுத்து படித்து வர சொன்ன பொழுது மாணவி தீக்சிகாவுக்கு தனி திறமை இருந்ததைக் கண்டு ஊக்கமளித்தோம்.

மேலும் அவரது குடும்பம் ஏழ்மையான குடும்பம் என்ற போதிலும் அவரது தந்தை கைத்தறி பட்டு நெசவுத்தொழில் செய்து வருகிறார். அவரது தாய் தையல் வகுப்புகளை எடுத்து வருகிறார் தொடர்ந்து அவரது வீட்டில் அவரது தாய் மற்றும் ஆசிரியர்கள் ஊக்கம் அளித்ததன் காரணமாக மாணவி தயக்கமின்றி 1330 குறள்களை சரளமாக கூறும் திறன் பெற்றுள்ளார் பல்வேறு பரிசுகளை பெற்றுள்ளது எங்கள் பள்ளிகளுக்கும் இந்த ஊருக்கும் பெருமை சேர்க்கும் விதமாக உள்ளது என கூறினார்.

பேட்டி

1. தீக்சிகா
ஆறாம் வகுப்பு பள்ளி மாணவி .

2. போதம்மாள்
பள்ளியின் தலைமை ஆசிரியர்

படக்காட்சிகள்

செம்மாண்டப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்கள் பள்ளியில் அமர்ந்து படிப்பது பள்ளி வளாகத்தில் மாணவர்கள் அமர்ந்திருப்பது திருக்குறள் ஒப்புவிக்கும் மாணவி, மாணவியை தலைமையாசிரியர் பாராட்டுவது உள்ளிட்ட காட்சிகள்.

author avatar
Savitha