Connect with us

Breaking News

மகன் நினைவு நாளில் தாய் மகளுடன் எடுத்த விபரீத முடிவு.. சிவகாசியில் நடந்த சோகம்..!

Published

on

மகன் நினைவு நாளில் மகளுடன் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள திருப்பதி நகரை சேர்ந்தவர் பாண்டிதேவி. இவரின் கணவர் இறந்து விட்டதால் அவரது மாற்று திறனாளி மகன் மற்றும் மகளை தனியே வளர்த்து வந்தார். தேர்தல் பிரச்சாரத்தின் போது முதல்வரிடம் தனக்கு வேலை வழங்ககோரி கோரிக்கை வைத்திருந்தார்.

Advertisement

இதனை அடுத்து, அவருக்கு கடந்த நவம்பர மாதம் அங்கன்வாடியில் பணி வழங்கப்பட்டது. அவரது மகன் கடந்த ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.இதனால், பாண்டிதேவி மகனின் நினைவில் இருந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில், மகனது நினைவு நாளான இன்று அவரது மகளுடன் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.தாயும் மகளும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement