கால்நடை மருத்துவப் படிப்புகள்; விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு.! கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அறிவிப்பு!

0
86

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் இளநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் தேதி அக். 9 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என, கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின்கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய இடங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு பட்டப் படிப்பு (பி.வி.எஸ்.சி. / ஏ.ஹெச்.), உணவு, கோழியின மற்றும் பால்வளத் தொழில்நுட்பப் பட்டப்படிப்புகள் (பி.டெக்.) பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன. +2 மதிப்பின் அடிப்படையில் இந்தப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

இந்த கல்லூரிகளில் 2020 – 21ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த மாதம் 24ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் தொடங்கியது. விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் 28ம் தேதி முடிவடைய உள்ள நிலையில், அடுத்த மாதம் (அக்டோபர்) 9ம் தேதி மாலை 6 மணி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதுவரை 12,009 மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனா். அதில் கால்நடை மருத்துவத்திற்கு 9,787 பேரும், தொழில்நுட்ப பட்டப்படிப்பிற்கு 2,222 பேரும் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Parthipan K