ஆசிரியர் தேர்வு -கால அவகாசம் நீட்டிப்பு :

0
110

சென்னை :

முதுகலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் பணியிடங்களுக்கு, ‘ஆன்லைன்’ வழியே விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி, 31-ம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.முதுகலை ஆசிரியர் தேர்வுக்கான ஆன்லைன் பதிவு செப்.20-ல் தொடங்கும்: ஆசிரியர்  தேர்வு வாரியம் அறிவிப்பு | teachers exam online application - hindutamil.in

ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், 2020 -2021ம் கல்வி ஆண்டிற்கான, முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் மற்றும் கணினி பயிற்றுனர் நிலை ஒன்றில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு, போட்டி தேர்வு நடைபெறவுள்ளது.

மேலும் தேர்வு வழியே நேரடி நியமனம் செய்ய செப்டம்பர் 9-ல் அறிவிப்பு வெளியானது. இதற்கான விண்ணப்பங்கள் செப்டம்பர் 18 முதல் பெறப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது .இந்நிலையில் தமிழ் வழி பயின்றோருக்கான சான்றிதழ் சார்ந்து, மென்பொருளில் மாற்றம் செய்ய வேண்டியுள்ளது.ஆசிரியர் தேர்வு வாரியம் கலைப்பு: டி.என்.பி.எஸ்.சி.,யிடம் ஒப்படைப்பு! |  Dinamalar Tamil News

இதன் காரணமாகவும், பல்வேறு விண்ணப்பதாரர்களின் வேண்டுகோளை ஏற்றும், ஆன்லைன் வழியே விண்ணப்பங்கள் பெறுவதற்கான கடைசி தேதி, 17-ம் தேதியில் இருந்து 31-ம் தேதி மாலை 5:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.

 

author avatar
Parthipan K