பேரிச்சம்பழ கேக்! நீங்களும் ட்ரை செய்து பாருங்கள்!

0
105

பேரிச்சம்பழ கேக்! நீங்களும் ட்ரை செய்து பாருங்கள்!

பேரிச்சம்பழம் இனிப்பான பழமாக இருந்தாலும் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட முக்கியமான பழமாக உள்ளது. மேலும் எடை இழப்பிற்கு இது பல நன்மைகளை செய்யக்கூடியதாய் உள்ளது. இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும், இரத்த குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்தவும், வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

பேரிச்சம்பழம் கேக் செய்ய தேவையான பொருட்கள் : மைதா இரண்டரை கப் , வெண்ணெய் ஒன்றே கால் கப், பால்ஒன்றரை கப் ,கண்டன்ஸ்டு பால்400 மிலி, பொடியாக நறுக்கியது பேரீச்சம்பழம் அரை கப் , ஆப்ப சோடா1 டீஸ்பூன், பேக்கிங்சோடா2 டீஸ்பூன், வெனிலா எசன்ஸ்1 டேபிள் ஸ்பூன் ,பொடித்த சர்க்கரை ஐந்து டேபிள் ஸ்பூன் எடுத்து கொள்ள வேண்டும்.

 

பேரிச்சம்பழம் கேக் செய்முறை :

மைதா 2 டீஸ்பூன் தனியே எடுத்து வைத்துவிடுங்கள். பின்னர் மீதி இருக்கும் மைதாவுடன் சோடா, பேக்கிங் பவுடர் , பேரீச்சம்பழத்தில் 2 டீஸ்பூன் மைதா சேர்த்து கலந்து வைக்க வேண்டும்.

மேலும் சர்க்கரையுடன் வெண்ணெய் சேர்த்து நன்கு குழையுங்கள். பின்னர் கண்டன்ஸ்டு பால் சேருங்கள். அத்துடன் பாலையும் மைதா, எசன்ஸையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

கடைசியில் பேரீச்சம் பழம் சேர்த்து கலந்து, வெண்ணெய் தடவி, மைதா தூவிய ஒரு ட்ரேயில் ஊற்றி 180 டிகிரி சென்டிகிரேடில் பேக் செய்யுங்கள். இதனை கடாயிலும் செய்யலாம்.

 

author avatar
Parthipan K