தென் இந்தியாவில் தப்பித்த தர்பார் ! வட இந்தியாவில் மண்ணைக் கவ்வியது : கலக்கத்தில் விநியோகஸ்தர் !

0
73

தென் இந்தியாவில் தப்பித்த தர்பார் ! வட இந்தியாவில் மண்ணைக் கவ்வியது : கலக்கத்தில் விநியோகஸ்தர் !

தர்பார் திரைப்படம் எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றாலும் கையைக் கடிக்காத வசூல் வந்துள்ள நிலையில் வட இந்தியாவில் படுதோல்வி அடைந்துள்ளது.

பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான தர்பார் முதல் நாளிலேயே எதிர்மறை விமர்சனங்கள் பெற்றதால் கூட்டம் குறைய ஆரம்பித்தது. முதல் நாளின் மாலை மற்றும் இரவு காட்சிகளில் டிக்கெட்கள் சர்வ சாதாரணமாகக் கிடைக்க ஆரம்பித்தது. இதனால் முதல்நாள் வசூல் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என சொல்லப்படுகிறது. இத்தனைக்கும் சிற்ப்புக்காட்சியின் டிக்கெட் விலை 1000 ரூபாயில் இருந்து 3000 ரூபாய் வரை விற்கப்பட்டது. இது அனுமதிக்க பட்ட விலையை பல மடங்கு அதிகமாகும்.

தமிழக திரையரங்குகள் மூலம் முதல் நாள் வசூலாக 16 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளதாக தெரிகிறது. இது வழக்கமாக ரஜினி படங்களின் வசூலை விட மிகக்குறைவு என சொல்லப்படுகிறது. ஆனால் தொடர் விடுமுறை இருந்ததால் ஓரளவு வசூல் வந்து கொண்டிருக்கிறது. இரு தினங்களுக்கு முன்னர் தர்பார் 200 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.

படம் நன்றாக இல்லை என்ற விமர்சனங்கள் எழுந்தாலும் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற திரையுலங்களில் சராசரியான வருவாய் வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியிலோ படம் படுதோல்வி அடைந்துள்ளது.  ரஜினி, முருகதாஸ், சுனில் ஷெட்டி என பாலிவுட் ரசிகர்களுக்கு தெரிந்த முகங்கள் இருப்பதால் அதிக தொகை கொடுத்த வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு இதுவரை 6 கோடி ரூபாய் மட்டுமே கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தர்பார் தோல்விக்கு மற்றுமொரு காரணமாக பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடிப்பில் தன்ஹாஜி : தி அன்சங் வாரியர் என்ற படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளதால் தர்பார் திரைப்படத்துக்கு போதிய கவனம் கிடைக்கவில்லை என சொல்லப்படுகிறது. கடந்த ஆண்டு வெளியான பேட்ட திரைப்படமும் இந்தியில் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

author avatar
Parthipan K