இந்தியாவில் அடுத்த மூன்று மாதத்தில் நிகழப்போகும் ஆபத்து:!! எச்சரிக்கும் வல்லுநர்கள்!

0
62

இந்தியாவில் அடுத்த மூன்று மாதத்தில் நிகழப்போகும் ஆபத்து:!! எச்சரிக்கும் வல்லுநர்கள்!

இந்தியாவில் அடுத்த மூன்று மாதத்தில் கொரோனாவின் இரண்டாம் அலை தாக்கம் இருக்குமென மத்திய அரசு எச்சரித்துள்ளது.
இதுகுறித்து நிதி ஆயோக் உறுப்பினர் மற்றும் நோய் கட்டுப்பாட்டு நிபுணர் குழு,தடுப்பூசி தயாரிப்பு குழு ஆகியவற்றின் தலைவரான
வி.கே.பால் அவர்கள் இதுதொடர்பாக நேற்று கூறியதாவது:

ஐரோப்பிய நாடுகளில் குளிர் காலத்தில் தான் கொரோனா தொற்று உச்சத்தை தொட்டது என்றும் அதே போல் இந்தியாவிலும் குளிர்காலத்தில் கொரோனாவின் தாக்கம் இரண்டாம் அலை வீசும் என்றும் எச்சரித்துள்ளார். கடந்த சில வாரங்களாக இந்தியாவில் கொரோனா தொற்றின் எண்ணிக்கையையும், உயிரிழப்பும் குறைந்து வருகிறது.இது மட்டுமின்றி இந்தியாவின் பல மாநிலங்களில் தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது.

ஆனால் இதைவைத்து கொரோனா தொற்று முடிந்துவிட்டதென்று அலட்சியமாக இருந்துவிடக் கூடாது என்றும்,மற்ற உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் தற்போது இந்தியா பாதுகாப்பாகவே உள்ளது. இருந்தபொழுதிலும் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா இருப்பதால் 90 சதவீத மக்களுக்கு நோய் எளிதில் நோய் பரவும் அபாயம் உள்ளது.இது மட்டுமின்றி ஐரோப்பிய நாடுகளில் குளிர் காலத்தில் தான் தொற்றின் வேகம் உச்சத்தை தொட்டது என்றும் இந்தியாவிலும் நவம்பர் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில் குளிர்காலம் இருப்பதனால் கொரோனா இரண்டாம் முறை தாக்கும் அபாயம் இருக்குமென்றும், அவர் எச்சரித்துள்ளார்.

மேலும் மக்கள் இந்த மூன்று மாதங்களில் ஏற்கனவே இருந்ததை விட மேலும் கவனமாக இருக்க வேண்டும் என்றும்,இரண்டாம் அலை என்பதால் கொரோனவைரஸின் வீரியம் மற்றும் செயல்படும் தன்மை பற்றி இன்னும் இறுதி முடிவுக்கு வர முடியாமல் நிபுணர்கள் ஆராய்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இதனால் இந்த மூன்று மாதங்களை மக்கள் மிக மிக கவனமாக கடக்க வேண்டும் என்றும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுவிட்டால் அனைத்து குடிமக்களுக்கும் கிடைக்க செய்யும் வகையில் மத்திய அரசிடம் திட்டம் தயாராக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

author avatar
Pavithra