தண்ணீர் வரி செலுத்த தவறிய பால் பண்ணை அதிபர்! வித்தியாசமான முறையில் அதிரடியாக வரி வசூலித்த அதிகாரிகள்! 

0
276
#image_title

தண்ணீர் வரி செலுத்த தவறிய பால் பண்ணை அதிபர்! வித்தியாசமான முறையில் அதிரடியாக வரி வசூலித்த அதிகாரிகள்! 

கார்ப்பரேஷனுக்கு செலுத்த வேண்டிய தண்ணீர் வரியை முறையாக செலுத்தாத பால் பண்ணை உரிமையாளரிடம் அதிகாரிகள் அதிரடியாக வித்தியாசமான முறையில் வரியை வசூலித்தனர். பரபரப்பும், சுவாரசியமும் நிறைந்த இந்த சம்பவம் மத்திய பிரதேசம் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

தண்ணீர் வரியை செலுத்தாத பால் பண்ணை உரிமையாளரிடமிருந்து எருமை மாட்டை முனிசிபல் கார்ப்பரேஷன் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியரில் டேலியன் வாலா என்ற பகுதியைச் சேர்ந்தவர் பால்கிஷன் பால். இவர் அங்கு எருமை மாடுகளை வைத்து பால் பண்ணை ஒன்றை  நடத்தி வருகிறார்.

இந்நிலையில் அவர் கார்ப்பரேஷனுக்கு ரூ.1.39 லட்சம் தண்ணீர் வரி பாக்கி செலுத்தாமல் காலதாமதம் செய்துள்ளார். இதனால் அவருக்கு மாநகராட்சி பொது சுகாதாரப் பொறியியல் துறை எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தண்ணீர் வரியை செலுத்துமாறு பலமுறை நோட்டீஸ் அனுப்பியும், அவர் முறையான பதில் அளிக்காமல் வரியை செலுத்தாமல் காலதாமதம் செய்து வந்ததால் அவருக்கு மாநகராட்சி பொது சுகாதார பொறியியல் துறை இறுதி எச்சரிக்கையாக நோட்டீஸ் ஒன்றை அனுப்பியது.

ஆனால் அந்த நோட்டீசை பார்த்த பிறகும் பால் கிஷன் தண்ணீர் வரி செலுத்தாததால் அவரின் பண்ணைக்குச் சென்று அதிகாரிகள் அங்கிருந்த எருமை மாட்டினை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறும் பொழுது வழக்கமாக சொத்து வரி மற்றும் தண்ணீர் வரியை செலுத்தாதவர்களின் பாக்கியை வசூலிக்கும் நடைமுறையின் ஒரு பகுதியாகவே அவரின் எருமை மாடு பறிமுதல் செய்யப்பட்டது என்று தெரிவித்துள்ளனர்.