கடன் தொல்லையால் மனைவியுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பால் வியாபாரி!

0
85
கடன் தொல்லையால் மனைவியுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பால் வியாபாரி!
கடன் தொல்லையால் மனைவியுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பால் வியாபாரி!

கடன் தொல்லையால் மனைவியுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பால் வியாபாரி!

கடன் தொல்லையால் மனைவியுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பால் வியாபாரி.

ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணி.  இவர் தனது இளைய மகளின் திருமணத்திற்காக  5 லட்ச ரூபாய் வட்டிக்கு கடன் பெற்றுள்ளார். இந்நிலையில் பால் வியாபாரியான மணி தனது மகளின் திருமணத்திற்காக வாங்கிய கடனை முறையாக  திருப்பி செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து மணியை பணத்தை திருப்பி செலுத்துமாறு வற்புறுத்தியுள்ளனர். மேலும் தகாத வார்த்தைகளாலும் மணியின் வீட்டின் பூட்டை பூட்டி கடனை திருப்பி செலுத்தினால் மட்டுமே வீட்டின் சாவியை கொடுக்க முடியும் என்று மிரட்டியுள்ளனர்.

மேலும் அக்கம் பக்கத்தினரும் ஊர் மக்களும் மணியின் சார்பாக கடன் கொடுத்தவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.  இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில் கடனை மிக விரைவில் திருப்பிச் செலுத்தி விடுவதாகவும் அதற்கு முன்னதாக தனது வீட்டின் சாவியை தருமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர். இதற்கு ஒப்புதல் தெரிவித்து வட்டிக்கு கடன் கொடுத்தவரும் மணியின் வீட்டின் சாவியை அவரிடம் ஒப்படைத்துள்ளார் மேலும் உரிய காலத்திற்குள் பணத்தை திருப்பித் தரவில்லை என்றால் மீண்டும் வீட்டை பூட்டி விடுவதாகவும் எச்சரித்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று வெகுநேரமாகியும் மணியின் வீடு திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனை கண்டு சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக சூரமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். விரைந்து வந்த காவல்துறையினர் வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது மணி மற்றும் அவரது மனைவி கண்மணி ஆகியோர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு இருந்தது தெரியவந்தது. இருவரின் சடலத்தை மீட்ட காவல்துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மகளின் திருமணத்திற்காக வாங்கிய கடனை செலுத்த முடியாமல் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான மணி மற்றும் அவரது மனைவி கண்மணி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து மணியின் உறவினர்கள் கூறுகையில், வட்டிக்கு கடன் பெற்று இருந்ததால் மணி வெகு நாட்களாகவே மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்ததாகவும் மேலும், கடன் கொடுத்தவர்கள் மிகுந்த நெருக்கடி கொடுத்ததாகவும், இதுவே மணியின்  மரணத்திற்கு காரணமாக அமைந்து விட்டதாகவும் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து சேலம் மாவட்ட ரெட்டிபட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

author avatar
CineDesk