இன்றைய (02-11-2021) ராசி பலன்கள்.!! யாருக்கு வெற்றி.!! யாருக்கு லாபம்.!!

0
95

 

இன்றைய (02-11-2021) ராசி பலன்கள்

மேஷம்

உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் உயர்வுக்கான சூழ்நிலைகள் அமையும். வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். வித்தியாசமான சிந்தனைகள் மற்றும் அதை சார்ந்த முயற்சிகளை வெளிப்படுத்தும் பொழுது பேச்சுக்களில் நிதானம் வேண்டும். முயற்சிகள் மேம்படும் நாள்.

ரிஷபம்

குடும்ப பெரியோர்களின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வர்த்தகம் சார்ந்த பணிகளில் சிந்தித்து செயல்படவும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உறவினர்களுடன் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். செய்கின்ற முயற்சிகளின் மூலம் முன்னேற்றமான தருணங்கள் ஏற்படும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். ஆசைகள் நிறைவேறும் நாள்.

மிதுனம்

எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழல் உண்டாகும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறைவு ஏற்படும். வியாபாரத்தில் உள்ள போட்டிகளை சமாளிக்க பொறுமையுடன் நடந்து கொள்ளவும். உறவினர்களின் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விளையாட்டு தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபாடு உண்டாகும். புதுமை பிறக்கும் நாள்.

கடகம்

தனவரவுகள் மேம்படும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். மனதிற்கு புதிய நம்பிக்கை ஏற்படும். வியாபாரத்தில் இருந்துவந்த இழுபறியான சூழல் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். எந்த செயலையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். சிறு தூர பயணத்தின் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

சிம்மம்

குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை மேம்படும். சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் ரீதியாக வெளியூர் நபர்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். வருமானம் மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். பேச்சுவன்மையின் மூலம் காரியசித்தி உண்டாகும். மாற்றம் நிறைந்த நாள்.

கன்னி

சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நினைத்த காரியங்கள் எண்ணிய விதத்தில் நிறைவேறும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. சுயதொழில் செய்பவர்களுக்கு லாபகரமான சூழல் உண்டாகும். நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் ஈடேறும். குடும்பத்தில் அமைதி நிலவும். பொருளாதாரம் தொடர்பான இன்னல்கள் குறையும். நிதானம் வேண்டிய நாள்.

துலாம்

பணிபுரியும் இடத்தில் புதிய பொறுப்புகள் அதிகரிக்கும். தொழில் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களின் வழியில் அலைச்சலுக்கேற்ப லாபம் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். அறிமுகம் கிடைக்கும் நாள்.

விருச்சிகம்

தொழில், வியாபாரத்தில் மந்தநிலை காணப்படும். உத்தியோக ரீதியான பிரச்சனைகள் குறையும். பெரிய மனிதர்களின் சந்திப்பால் நன்மைகள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மறைமுக திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். புத்துணர்ச்சியான நாள்.

தனுசு

அரசு துறையில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். ஆடம்பர பொருட்களின் மீது ஈர்ப்பு அதிகரிக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த தேக்க நிலைகள் குறையும். மற்றவர்களின் செயல்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. வேலையில் உடனிருப்பவர்களுடன் அனுசரித்து செல்லவும். பொறுமை வேண்டிய நாள்.

மகரம்

எதிர்பார்த்திருந்த சில உதவிகள் சாதகமாக அமையும். கொடுக்கல், வாங்கலில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவது தொடர்பான ஆர்வம் அதிகரிக்கும். வழக்கு தொடர்பான விஷயங்களில் புதிய முயற்சிகளுக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். ஆன்மிக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். வரவுகள் மேம்படும் நாள்.

கும்பம்

எதிர்பாராத செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் உண்டாகும். நெருக்கமானவர்களிடத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். மனதில் அஞ்ஞான சிந்தனைகள் மேம்படும். இயந்திரம் தொடர்பான பணியில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்பட வேண்டும். வர்த்தகம் தொடர்பான முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். எண்ணிய காரியங்களை செய்து முடிப்பதில் சிறிது காலதாமதம் உண்டாகும். அமைதி வேண்டிய நாள்.

மீனம்

வாழ்க்கைத்துணைவருடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தொழில் தொடர்பான செயல்பாடுகளில் அபிவிருத்திக்கான எண்ணங்கள் மேம்படும். சுபகாரியம் தொடர்பான முயற்சியில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உடன்பிறந்தவர்களின் மூலம் எதிர்பார்த்திருந்த சில உதவிகள் சாதகமாக அமையும். சுகபோகம் மேம்படும் நாள்.