இந்த ராசிக்கு பழைய கடன்கள் வசூலாகும்! இன்றைய ராசி பலன் 09-11-2020 Today Rasi Palan 09-11-2020

0
94

இன்றைய ராசி பலன்- 09-11-2020
நாள்09-11-2020
தமிழ் மாதம்:
ஐப்பசி 24 , திங்கட்கிழமை
நல்ல நேரம்:
காலை 6.15 மணி முதல் 7.15 மணி வரை, மாலை 3.00 மணி முதல் 4.00 மணி வரை.
இராகு காலம்:
காலை 7.30 முதல் 9.00 வரை
எம கண்டம்:
பகல் 10.30 முதல் 12.00 வரை
குளிகன்:
மதியம் 1.30 முதல் 3.00 வரை
திதி:
அஷ்டமி திதி காலை 06.51 வரை பின்பு நவமி திதி பின்இரவு 05.28 வரை பின்பு தேய்பிறை தசமி.
நட்சத்திரம்:
ஆயில்யம் நட்சத்திரம் காலை 08.42 வரை பின்பு மகம்.
சித்தயோகம் காலை 08.42 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். குடும்பத்தில் மன அமைதி குறைவதற்கான சூழ்நிலை உருவாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் தாமதநிலை ஏற்படலாம். பூர்வீக சொத்துக்களால் லாபம் அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் வேலையில் உற்சாகத்துடன் ஈடுபடுவார்கள்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் தோன்றும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் நண்பர்களால் முன்னேற்றம் ஏற்படும். வேலையில் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் அனுகூலப்பலன் கிட்டும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றியை தரும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

கடகம்

கடக ராசிக்காரர்களே உங்கள் உடல் நிலையில் சற்று மந்த நிலை உண்டாகலாம். பிள்ளைகளுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். எடுக்கும் முயற்சிகளுக்கு உறவினர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். வியாபாரத்தில் வெளியூர் பயணங்களால் அனுகூலப்பலன் உண்டாகும். எதிலும் நிதானம் தேவை.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே நீங்கள் தொட்ட காரியம் எல்லாம் வெற்றியில் முடியும். சுப முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் கிட்டும். குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்பட்டு மகிழ்ச்சி நிலவும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே உங்களுக்கு மனகுழப்பம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களால் வீண் விரயங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் உடனிருப்பர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறும் சூழ்நிலை உருவாகும்.

துலாம்

துலா ராசிக்காரர்களே உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே இன்று நீங்கள் கடினமான காரியத்தை கூட திறமையுடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் இருந்த கடன் பிரச்சினைகள் குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வருமானம் பெருகும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகலாம். குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு மனஸ்தாபங்கள் தோன்றும். உற்றார் உறவினர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் முன்னேற்றத்தை அடையலாம். புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களே நீங்கள் செய்யும் செயல்களில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன அமைதி குறையும். வியாபாரத்தில் மற்றவர்களுக்கு கடன் கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம். குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் ஏற்படும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே குடும்பத்தில் சுபசெலவுகள் செய்யகூடிய சூழ்நிலை உண்டாகும். உற்றார் உறவினர்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கும். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். வேலையில் இருந்த பிரச்சினைகள் குறைந்து நிம்மதி நிலவும்.

மீனம்

மீன ராசிக்காரர்களே  இன்று நீங்கள் செய்யும் செயலில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். நண்பர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்ச்சியை தரும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். பழைய கடன்கள் வசூலாகும். வங்கி சேமிப்பு உயரும்.

author avatar
Kowsalya