இன்றைய (01-11-2021) ராசி பலன்கள்.!! யாருக்கு வரவு.? யாருக்கு உயர்வு.?

0
88

 

இன்றைய (01-11-2021) ராசி பலன்கள்

மேஷம்

உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலைகள் ஏற்படும். கூட்டுத்தொழிலில் வருமானம் அதிகரிக்கும். பலதரப்பட்ட மக்களின் தொடர்பும், ஆதரவும் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். கனிவான பேச்சுக்களின் மூலம் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். எண்ணியது நிறைவேறும் நாள்.

ரிஷபம்

உத்தியோகம் தொடர்பான பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். போட்டித் தேர்வுகளில் பங்கேற்று பாராட்டுகளை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். தாய்வழி உறவினர்களின் ஆதரவும், அன்பும் மனதிற்கு புதுவிதமான நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். அனுபவம் மேம்படும் நாள்.

மிதுனம்

வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். புதிய மனை மற்றும் அதை சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். முயற்சிகளின் மூலம் புதுவிதமான அனுபவம் கிடைக்கப் பெறுவீர்கள். மறைமுகமான எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். உடன்பிறந்தவர்களின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். பொறுமை வேண்டிய நாள்.

கடகம்

ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். எதிர்பாராத தனவரவுகள் மேம்படும். செய்கின்ற முயற்சிகளில் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். நீண்ட நாட்களாக மனதை உறுத்தி வந்த கவலைகளிலிருந்து விடுதலை பெறுவீர்கள். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். முயற்சிகளால் முன்னேறும் நாள்.

சிம்மம்

வியாபாரம் சம்பந்தமான மாற்றங்களில் பெரியோர்களின் ஆலோசனைகளை கேட்டு முடிவெடுப்பது நல்லது. உடன்பிறந்தவர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபார ரீதியான பொருளாதார நெருக்கடிகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும். இடமாற்றம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வரவுகள் நிறைந்த நாள்.

கன்னி

பழைய நினைவுகளின் மூலம் மனதில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவது தொடர்பான விஷயங்களில் பொறுமை வேண்டும். வெளியூர் தொடர்புகளின் மூலம் ஆதாயம் மேம்படும். பொதுமக்கள் தொடர்பான பணிகளில் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். சஞ்சலங்கள் நிறைந்த நாள்.

துலாம்

வியாபார அபிவிருத்திக்கான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உடனிருப்பவர்கள் பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் உண்டாகும். இணையம் சார்ந்த பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும். விருப்பங்கள் நிறைவேறும் நாள்.

விருச்சிகம்

தொழில் முயற்சிகளில் நுட்பமான சிந்தனைகளின் மூலம் லாபம் உண்டாகும். கலைநயம் மற்றும் கவித்துவமான சிந்தனைகள் மேம்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். எதிர்பார்த்திருந்த சில உதவிகள் சாதகமாக அமையும். நண்பர்கள் உங்களது தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பார்கள். புத்துணர்ச்சியான நாள்.

தனுசு

எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். எதிர்பாராத சில அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அனுகூலம் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான செலவுகள் ஏற்படும். கடன் தொடர்பாக இருந்துவந்த சிக்கல்கள் குறையும். பிள்ளைகளின் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். செல்வாக்கு மேம்படும் நாள்.

மகரம்

நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தெய்வீக காரியங்களில் ஆர்வம் அதிகரிக்கும். மனதளவில் தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் லாபம் உண்டாகும். பொறுப்புகள் அதிகரிக்கும் நாள்.

கும்பம்

மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பதில் அலைச்சல்கள் உண்டாகும். கால்நடை தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். வாழ்க்கைத்துணைவருடன் சில கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்து செயல்படவும். விழிப்புணர்வு வேண்டிய நாள்.

மீனம்

சிறு வியாபாரங்களின் மூலம் புதிய அத்தியாயத்தை உருவாக்குவீர்கள். பழமையான விஷயங்களின் மீது ஈடுபாடு ஏற்படும். புதிய நபர்களின் நட்பு மற்றும் அறிமுகம் ஏற்படும். தாய்வழி உறவினர்களிடத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். ஒத்துழைப்பு நிறைந்த நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here