இன்றைய (28-10-2021) ராசி பலன்கள்.!! யாருக்கு உயர்வு.! யாருக்கு வரவு.!

0
159

 

இன்றைய (28-10-2021) ராசி பலன்கள்

மேஷம்

குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகளும், கலகலப்பான சூழ்நிலைகளும் உண்டாகும். புதிய முயற்சிகளின் மூலம் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். புதிய மனை மற்றும் வீடு வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பொதுமக்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பு அதிகரிக்கும். இன்பமான நாள்.

ரிஷபம்

சிறு வியாபாரம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கம்பீரமான பேச்சுக்களின் மூலம் இழுபறியான வேலைகளை செய்து முடிப்பீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஆதரவுகள் கிடைக்கும். தன்னம்பிக்கை பிறக்கும் நாள்.

மிதுனம்

வாக்கு சாதுர்யத்தின் மூலம் இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். புதுவிதமான அணிகலன்கள் செய்வது மற்றும் அது தொடர்பான விருப்பங்கள் மேம்படும். பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் காணப்படும். எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். நன்மைகள் ஏற்படும் நாள்.

கடகம்

இணையம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் சோர்வுகளும், காலதாமதமும் உண்டாகும். மனதில் இருக்கும் ரகசியங்களை மற்றவர்களிடம் கூறுவதை குறைத்துக் கொள்வது நன்மையை ஏற்படுத்தும். நிதானம் வேண்டிய நாள்.

சிம்மம்

உடனிருப்பவர்களின் மூலம் அனுகூலமான சூழல் ஏற்படும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் சிந்தித்து செயல்படவும். உத்தியோகத்தில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களிடம் சிறு சிறு ஆரோக்கியமற்ற விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். மறதி உண்டாகும் நாள்.

கன்னி

சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக நிறைவடையும். வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் மற்றும் அபிவிருத்திக்கான முயற்சிகள் சாதகமாக அமையும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் திடீர் மாற்றங்கள் உண்டாகும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். உயர்வு பிறக்கும் நாள்.

துலாம்

வியாபார பணிகளில் லாபம் மேம்படும். உயர் அதிகாரிகளின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். புத்திரர்களின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். உறவினர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அரசு சார்ந்த செயல்பாடுகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். பொருளாதாரம் தொடர்பான உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். வரவுகள் மேம்படும் நாள்.

விருச்சிகம்

திட்டமிட்ட காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடித்து மனம் மகிழ்வீர்கள். உறவினர்களின் மூலம் திருப்தியான சூழ்நிலைகள் அமையும். விவசாயம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். மனதில் ஆராய்ச்சி தொடர்பான முயற்சிகள் மற்றும் சிந்தனைகள் அதிகரிக்கும். குடும்ப பெரியோர்களின் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கும். ஆர்வம் அதிகரிக்கும் நாள்.

தனுசு

எதிர்பாராத செலவுகள் ஏற்படும். மற்றவர்களுடைய செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது உத்தமமாகும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். வாகன பயணங்களில் நிதானம் வேண்டும். வியாபார பணிகளில் புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. சோர்வான நாள்.

மகரம்

மனதில் நினைத்த காரியங்களை நினைத்த விதத்தில் செய்து முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். நண்பர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். நெருக்கமானவர்கள் இடத்திலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான புதிய முயற்சிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். சிக்கல்கள் நீங்கும் நாள்.

கும்பம்

மனதில் நெருக்கமானவர்கள் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். வர்த்தகம் தொடர்பான புதிய முதலீடுகளில் தகுந்த ஆலோசனைகளை பெற்று முடிவுகளை எடுக்கவும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்யும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து சிந்தித்து செயல்படுதல் நன்மையளிக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறைவதற்கான சூழ்நிலைகள் அமையும். புரிதல் உண்டாகும் நாள்.

மீனம்

பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். உடனிருப்பவர்களின் தன்மைகளை அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். வியாபாரம் சம்பந்தமான செயல்களில் சிறு சிறு மாற்றங்களை செய்வதன் மூலம் லாபத்தை மேம்படுத்த முடியும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அமைதி பிறக்கும் நாள்.