இன்றைய (26-10-2021) ராசி பலன்கள்.!! யாருக்கு அதிர்ஷ்டம்.? யாருக்கு வெற்றி.?

0
120

 

இன்றைய (26-10-2021) ராசி பலன்கள்

மேஷம்

எதிர்பார்த்திருந்த சில உதவிகள் சாதகமாக அமையும். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஆதாயம் உண்டாகும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சிந்தனையின் போக்கில் முன்னேற்றத்திற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் பலரின் ஆதரவுகளை பெறுவீர்கள். வேளாண்மை தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும். உழைப்பால் முன்னேறும் நாள்.

ரிஷபம்

கோபமான பேச்சுக்களை குறைத்துக்கொள்வது உங்களின் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். எந்தவொரு செயலிலும் வேகம் அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் உண்டாகும். பேச்சுக்களில் அனுபவ அறிவு மேம்படும். உடல் தோற்றப்பொலிவில் மாற்றங்கள் ஏற்படும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். மாற்றம் நிறைந்த நாள்.

மிதுனம்

எதிர்பாராத செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் உண்டாகும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. இழந்த பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வெளியூர் பயணம் மேற்கொள்வது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். கலை சார்ந்த அறிவு மேம்படும். வாக்கு திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதுமைகள் நிறைந்த நாள்.

கடகம்

குடும்பத்தில் உங்களது பொறுப்புகள் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு கீர்த்தி உண்டாகும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மற்றும் அது சார்ந்த பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். அலைச்சல் நிறைந்த நாள்.

சிம்மம்

வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த தடைகள் குறையும். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் சாதகமான வாய்ப்புகள் அமையும். குடும்பத்திலுள்ள பெரியவர்களுடன் ஒற்றுமையான சூழ்நிலையும், தனவரவுகளும் ஏற்படும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். சந்தோஷமான நாள்.

கன்னி

சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு முயற்சிக்கு ஏற்ப அங்கீகாரங்கள் கிடைக்கும். செய்தொழிலில் மேன்மையும், முன்னேற்றமும் உண்டாகும். புதுவிதமான லட்சியங்களை உருவாக்குவீர்கள். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மேன்மைக்கான சூழ்நிலைகள் உண்டாகும். உயர்கல்வி தொடர்பான பணிகளில் எண்ணிய உதவிகள் சாதகமாகும். பயணங்கள் கைகூடும் நாள்.

துலாம்

செலவுகளின் தன்மைகளை அறிந்து மேற்கொள்வது சேமிப்பிற்கு நன்மை அளிக்கும். மற்றவர்கள் கூறும் கருத்துக்களில் உள்ள உண்மையை அறிந்து முடிவுகளை எடுக்கவும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தொழில் சார்ந்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பாராத அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். பெரியோர்களிடம் நிதானம் வேண்டிய நாள்.

விருச்சிகம்

மாணவர்கள் கல்வியில் கவனத்துடன் இருக்க வேண்டும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் சற்று சிந்தித்து செயல்படவும். கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். தடுமாற்றம் நிறைந்த நாள்.

தனுசு

தடைபட்டு வந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். நண்பர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உயர் அதிகாரிகளின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். கூட்டாளிகளிடம் அனுகூலமான சூழ்நிலைகள் காணப்படும். திடீர் மாற்றம் உண்டாகும் நாள்.

மகரம்

கடன் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பயணங்கள் கைகூடும். குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். நுணுக்கமான விஷயங்களின் மூலம் லாபம் மேம்படும். வாகன மாற்றம் தொடர்பான எண்ணங்கள் மனதில் உண்டாகும். பிரிந்து சென்றவர்கள் விரும்பி வருவதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். தடைகள் விலகும் நாள்.

கும்பம்

குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமை மேம்படும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் ஏற்படும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் காணப்படும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபமும், அலைச்சலும் உண்டாகும். வேறுபாடுகள் நீங்கும் நாள்.

மீனம்

இளைய சகோதரர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். சொத்துக்கள் விற்பது மற்றும் வாங்குவது தொடர்பான செயல்பாடுகளில் ஆதாயம் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். முயற்சிகள் ஈடேறும் நாள்.