நாட்டில் சற்றே ஏற்றமடைந்த நோய்த்தொற்று பரவல்!

0
60

சீனாவில் கடந்த 2019ஆம் ஆண்டு முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனாவைரஸ் அதன்பிறகு 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது.

இதன் காரணமாக, உலக அளவில் பொருளாதாரம் மிகவும் நலிவுற்று காணப்பட்டது.. இந்தியாவைப் பொறுத்தவரையில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்த நோய் தொற்று பரவ தொடங்கியது.ஆரம்பத்திலிருந்தே இந்த நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில, அரசுகள் துடிப்புடன் செயல்பட்டனர்.

இதனால் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்த மத்திய அரசு இந்த நோய் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி கண்டறிவதில் தீவிரம் காட்டியது.அதனடிப்படையில், தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது நாடு முழுவதும் அனைவருக்கும் செலுத்தப்பட்டு வருகிறது.ஆகவே தற்சமயம் இந்தியாவில் மெல்ல, மெல்ல நோய்த்தொற்று பரவல் குறைய தொடங்கியிருக்கிறது.

இந்நிலையில், ஒருநாள் நோய்த் தொற்று பாதிப்பு நேற்று 3,993 என இருந்த நிலையில், இன்று 4 575 ஆக அதிகரித்திருக்கிறது. ஆகவே நாட்டில் நோய் தொற்று பாதிப்பு 4,29,71,308 என்ற அளவிலிருந்து, தற்சமயம் 4,29,75,883 என அதிகரித்திருக்கிறது.ஒரே நாளில் 7,416 நபர்கள் நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து, குணமடைந்திருக்கிறார்கள்.

நாட்டில் நோய் பாதிப்பிலிருந்து குணமடைந்து வருவோரின் எண்ணிக்கை 4,24,06,150 என்ற அளவிலிருந்து தற்சமயம் 4,24,13,566 என்று அதிகரித்திருக்கிறது.

நாட்டில் ஒரே நாளில் நோய்தொற்றுக்கு 145 பேர் பலியாகியிருக்கிறார்கள் இதுவரையிலும் இந்தியாவில் நோய் தொற்றால் பலியானோரின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 5,15,355 என அதிகரித்திருக்கிறது. நாடு முழுவதும் இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 46 992 என குறைந்திருக்கிறது.

நாட்டில் ஒரே நாளில் 18,69,103 நபர்களுக்கு நோய் தொற்று தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது நாட்டில் இதுவரையில் 179.33 கோடி தவணைகள் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. இந்த தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.